தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல் நிகழ்வை கனடியத் தமிழர் தேசிய அவை மேற்கொண்டுள்ளது.
கையெழுத்துக்கள், கனடாவாழ் தமிழ் மக்களிடமும் பல்லின மக்களிடமும் சேகரிக்கக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் அனைத்து மக்களவைகளுடனும் மற்றய அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச அளவில் இக்கையெழுத்துத் திரட்டல் நடாத்தப்படவுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் தத்தம் நாட்டு அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் கையளிக்கப்படுவதுடன் அனைத்து நாட்டுத் தூதுவராலயங்களுக்கும் கையெழுத்துப் பிரதிகள் அனுப்பிவைக்கப்படும்.
ஈழமண்ணில் போர்க்குற்றம் நடாத்தியவர்கள் தண்டிக்கப்பட்டு, ஈழத்தில் வாழும் தமிழ் மக்களிடமும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பை நடாத்தி, ஈழமக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கான உரிமையை சர்வதேசம் வழங்கவேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது.
ஒவ்வொருவரும் தவறாது இக்கையெழுத்துத் திரட்டல் வேலைத்திட்டத்தில் பங்கேற்று அதற்கு தங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
13 June 2012



0 Responses to போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல்