தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருச்சியில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் செய்தனார். அப்போது போது எழுப்பிய கோஷங்கள்:
அண்டா திருடன் மத்திய அரசு
குண்டா திருடன் மாநில அரசு
பெட்ரோலுக்கு விலையை உயர்த்தி
மக்கள் தலையில் சுமையை ஏற்றிய
மத்திய அரசை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் ஆர்ப்பாட்டம்
தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
நாளைய முதல்வர் புரட்சி கலைஞர்
கேப்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளே
அடிக்காதே அடிக்காதே
மக்கள் வயிற்றில் அடிக்காதே
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
பெட்ரோலுக்கு ஏற்றிய விலையை
எச்சரிக்கை செய்கிறோம்
உடனடியாக வாபஸ் வாங்கு
வரலாறுகாணதா மின்வெட்டால்
தமிழக தொழில்கள் அத்தனையும்
முற்றிலும் முடங்கி போயிற்று
தமிழ்நாட்டை விட்டே போயிருச்சு
வேலை இழந்து தவிக்கின்ற
தொழிலாளர் குடும்பம் அத்தனையும்
நடுத் தெருவுக்கு வந்தாச்சு
நாதிகெட்டு நின்னாச்சு
இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவே
பெட்ரோல் விலை ஏற்றத்தினால்
மக்கள் கண்ணீர் மத்திய அரசை
வீழ்த்தியே தீரும் என்கிறார்.
அன்புச் சகோதரி ஜெயலலிதாவே
எங்கள் கேப்டன் கேட்கின்றார் ம
த்திய அரசை வீழ்த்தும் என்றால்
மக்கள் கண்ணீர் தமிழக அரசை
மாலை போட்டு வாழ்த்துமா என்ன?
பதிலைச் சொல்லுங்கள் ஜெயலலிதாவே!
மத்திய, மாநில அரசுகளுக்கு
எந்த வகையிலும் நஷ்டம் இல்லை
நஷ்டம் எல்லாம் மக்களுக்கே
கஷ்டம் யாவும் மக்களுக்கே,
மத்திய அரசம் மாநில அரசம்
மக்கள் விரோத அரசுகளே
இமயம் முதல் குமரி வரை
எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம்
அண்டா திருடன் மத்திய அரசு
குண்டா திருடன் மாநில அரசு
முன்னே போனால் கடிக்குது
பின்னே வந்தால் உதைக்குது
மத்திய அரசு கடிக்குது
மாநில அரசு உதைக்குது
கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை
இவர்களுக்கு புரியாது மக்களின் வேதனை
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
01 June 2012
0 Responses to அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்