Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையேர் அவை பெருமை அடைகிறது.

சர்வதேச அரங்கில் இடம்பெறும் ஒரு காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக் கிண்ணப் போட்டி இம்மாதம் எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது.

FIFA உலகச் சுற்றுக் கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி Nouvelle Fédération-Board (N.F. Board) ஆல் நடாத்தப்படுகிறது.

காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டு வீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம் இவர்களுக்கு தாங்கள் தமிழீழத்தைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் என்னும் அங்கீகாரமும் கிடைக்கும்.

தம் தாய் நாட்டின் சார்பாக ஒரு சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவது என்பது பெருமைப் படக்கூடியதொன்றாகும். இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி தமிழீழ அணியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றனர்.

இவ்வாண்டு வீவா சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம், டார்பூர், இராக்கி குருதிஸ்தான், வட சைபிரசு, ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்சு, மேற்கு சகாரா மற்றும் சான்சிபார் ஆகிய ஒன்பது அணிகள் மோதவுள்ளன.

இவ்வணிகள் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்துக்காக கடுமையாக போட்டியிடவுள்ளன. தென் ஆபிரிக்காபின் முன்னால் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தன் மக்களின் விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடினார். அவரின் நினைவாகவே இவ்வெற்றிக் கிண்ணத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இச்சுற்றுக்கிண்ணப் போட்டியானது, தமிழர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாகும். இது ஒரு போட்டி என்பதை தவிர்த்து, தமிழீழத்துக்கான சர்வதேச அங்கீகாரத்தின் ஒரு படிக்கல்லாக அமைகிறது.

இந்த சர்வதேச போட்டியில் தமிழீழ அணி பங்குபெறுவது எமது நாட்டின் அடையாளத்தை உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

தமிழ் மக்களின் பண்பாடும் அடையாளமும் சர்வதேச சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இப்போட்டி மிகவும் உறுதுணையாக அமையும். ஒரு சர்வதேச அரங்கில் நடைபெற இருக்கும்

இந்த போட்டியில் முதல் முறையாக தமிழீழ அணியைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் தங்கள் கைகளில் தமிழீழ தேசிய கொடியை ஏந்தி வருவார்கள்.

தமிழீழ அணிக்கு எமது வாழ்த்துகள்

உலகளாவிய தமிழ் இளையோர் அவை.

0 Responses to நெல்சன் மண்டேலா | வெற்றிக் கிண்ணத்துக்காக சர்வதேச அரங்கில் போட்டியிடும் தமிழீழ அணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com