Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வேயில் 77 பேரை கொலை செய்த ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் ஒரு பாசிசவாதி என்று நோஸ்க் சமூகவியலாளர் த்ரேய எம்பர்லான்ட் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் எப்படி யூதர்களை அழிக்க வேண்டுமென கிம்லர் – எஸ்.எஸ். படைகள் இயங்கினவோ அதே போலவே நோஸ்க் கொலையாளியும் இயங்கியுள்ளார்.

யூதர்களை வேரோடு அழிக்க வேண்டும் துடைத்தெறிய வேண்டும் என்பது போலவே இவரும் முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டுமெனக் கருதியிருக்கிறார்.

ஒப்பிட்டுப்பார்த்தால் பிறீவிக்கின் உள்ளத்தில் இருந்ததும் யூத அழிவிக்கு காரணமான பாசிஸ்டுக்கள் எண்ணத்தில் இருந்ததும் அடிப்படையில் ஒன்றே என்றும் தெரிவித்தார்.

ஆகவே ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கிற்கு செல்லம் காட்டாமல் கடும் தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

டென்மார்க் மாஸ்க் நிறுவன அதிபர் மாஸ்க் கெனி மூலர் மரணமடைந்த பின்னர் தற்போது மாஸ்க் பல்வேறு திருத்தங்களை சந்தித்து வருகிறது.

மாஸ்க் கோப்பன்கேகன் பிரிவு மாற்றியமைக்கப்படுவதால் மொத்தம் 250 பேருக்கு மாஸ்க் லைனில் வேலை நீக்கக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

மாஸ்க் நிறுவனம் உலகம் முழுவதும் 25.000 பணியாளருடன் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது.

டேனிஸ் அரசு வடகடலில் இருந்து எடுக்கும் ஓயில் – எரிவாயுவின் சென்ற ஆண்டு உற்பத்தி வரவு 30.6 பில்லியன் குறோணர்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு டேனிஸ் உற்பத்தியானது சுமார் 10 வீதம் அதிகரிக்கப்பட்டது அதேவேளை ஓயில் விலையும் பீப்பா 111 டாலர்களாக வரலாறு காணாத உயர்வை சந்தித்ததும் இந்த அதிகரிப்பிற்குக் காரணமாகும்.

சான்ட்விச் கண்டு பிடிக்கப்பட்டு 250 நிறைவு விழா ஐரோப்பாவின் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1762 ம் ஆண்டு ஜார்லன் என்பவரால் இரண்டு பாண்களுக்கு இடையில் இறைச்சியை வைத்து உண்ணும் சான்விச் முறை தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டு சான்ட்விச் என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

டென்மார்க் ஸ்வன்ட்போ நகரத்தில் 20 வயதுடைய தம்பியை பலம் கொண்ட மட்டும் தாக்கி கொல்ல முயன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக தாக்குதலை நடாத்திய அண்ணன் அவரை கொல்வதுவரை சென்றுள்ளார் அம்புலன்ஸ் வண்டி வந்து அவரை அரும் பொட்டில் காப்பாற்றியுள்ளது.

அலைகள்

0 Responses to ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பூத்த செய்தி மலர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com