Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள அரசினது நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டியும், பிரித்தானியத் தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை லண்டனில் ஒன்றுதிரண்டனர்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக அணிதிரண்ட தமிழர்கள், தமிழர்களுக்கான நீதியைக்கோரும் கொட்டொலிகளை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் , பிரித்தானியாவின் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து, தங்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இதேவேளை இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், தமிழர்களுடன் வெள்ளையின மக்களும் கலந்து கொண்டு தங்கள் தோழமையினை வெளிப்படுத்தியிருந்ததோடு, சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகரும் கலந்து கொண்டு, தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாடியிருந்தார்.

0 Responses to நில அபகரிப்புக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானியத் தமிழர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com