நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய கர்நாடக முதல் அமைச்சர் சதானந்த கவுடா உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு அருகில் உள்ள பிடதியில் உள்ள ஆசிரமத்தின் சொத்துக்களை கைப்பற்றவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
பெங்களூருவில் நித்தியானந்தா விவகாரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பின்னர் இதனை கர்நாடக முதல் அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராம்நகர் மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கிறேன். ஆசிரமத்தின் சொத்துக்களை கையக்கப்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. பிடதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறேன். மூன்றாவதாக நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தி உள்ளேன். அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடைசியாக நித்தியானந்தா கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.
நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான அமெரிக்க வாழ் பெண் ஆர்த்தி ராவ் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், 2005 முதல் 2010ஆம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தில் தம்மை கட்டாயப்படுத்தி 40 முறை நித்தியானந்தா பாலியல் உறவு கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கர்நாடகா முழுவதும் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நித்தியானந்தா செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டினார். அப்போது, கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை, நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
இந்த நிலையில் நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நித்தியானந்தா கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்! கர்நாடக முதல் அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 June 2012



0 Responses to நித்தியானந்தா கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்! கர்நாடக முதல் அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி!