பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தை அடுத்து மான்ஷன் ஹவுசில் நடைபெறவிருந்த நிகழ்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் மதிய போசனமும் ஏனைய நிகழ்வுகளும் திட்டமிட்டபடி Marlborough Houseசில் நடைபெறும் என பொதுநலவாய வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
முதலில் தமிழ் அமைப்புக்களின் மகஜர் மற்றும் கடிதங்களின் காரணமாக மகிந்த ராஜபக்சேவின் பேச்சு நிற்பாட்டப்பட்டிருந்த நிலையில், தொடர் போராட்டங்களின் காரணமாக பாதுகாப்புக் கருதி அந் நிகழ்வே ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.
நாளை காலை 10 மணி முதல் 10.30 மணிவரை சுமார் அரை மணித்தியாலம் மகிந்த ராஜபக்ஷ காமன்வெலத் வணிக சம்மேளனத்தில் உரையாற்ற இருந்தார். ஆனால் பெருந்தொகையான தமிழர்கள் திரண்டு வந்து அவ்விடத்தை முற்றுகையிட்டால், லணடன் நகரின் மத்திய பகுதியான அவ்விடம் ஸ்தம்பிக்கும் நிலை தோன்றும். இதனால் பிற நாட்டு ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது பாதிக்கப்படும். இதனை அடுத்து பிரித்தானியப் பொலிசார், காமன்வெலத் தலைமயகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தம்மால் போதிய பாதுகாப்பை வழங்கமுடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காமன்வெலத் தலைமை அதிகாரி நாளை காலை நடபெறவிருந்த நிகழ்சியை முற்றாக ரத்துச்செய்துள்ளார்.
இருப்பினும் மதியம் 12.30 மணிக்கு கூடும், தலைவர்கள் அங்கே மதிய உணவை அருந்த ஏற்பாடாகியுள்ளது. இது மான்சன் கவுசுக்கு அருக்கில் உள்ள, கட்டிடம் ஒன்றில் நடைபெறவுள்ளது. இந்த விருந்து வைபவத்திலும் மகிந்தரைக் கலந்துகொள்ள விடுவது இல்லை என தமிழர்கள் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளனர். நாளை மாலை மகிந்தர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளார். மதிய உணவை அவர் முடித்துக்கொண்டு, அங்கிருந்து மாலை விமான நிலையம் செல்லவுள்ள அவரை, எதிர்த்து தமிழர்கள் பாரிய அளவில் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
எனவே மகிந்தரின் உரை தான் ரத்தாகிவிட்டதே, நாம் வென்றுவிட்டோம் என எண்ணி தமிழர்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளாது இருக்க வேண்டாம். அனைத்து தமிழர்களும் திரண்டுசென்று, மகிந்தரின் மதியபோசன விருந்தையும் ரத்துச்செய்ய வைக்கவேண்டும் ! இனி பிரித்தானியாவுக்கு அவர் வருகை தரக் கூடாது என்று நினைத்து இங்கிருந்து ஓடவேண்டும் ! அதுவே தமிழர்கள் கொடுக்கும் ராஜதந்திர அடியாக இருக்கும் !
நாளை ஐரோப்பாவிலிருந்து உணர்வாளர்கள் வரவிருக்கும் நிலையில், பிரித்தானியா வாழ் உணர்வுள்ள தமிழர்கள் யாவரையும் அணி திரண்டு வந்து, இனிமேலும் பிரித்தானியா ராஜபக்சே போன்ற இன வெறியர்களை தங்களது நாட்டிற்கு வரவழைக்காது இருப்பதற்கும், ராஜபக்சே இனிமேல் தனது வாழ்நாளில் பிரித்தானியாவிற்கு வருவதை கனவிலும் நினைத்து பார்க்காமல் இருப்பதற்கும் தமது எதிர்ப்பினை காட்டுமாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அழைக்கின்றது.
ஈழத் தமிழர்களின் தொடர் ஆர்ப்பாட்டம்: தற்பாதுகாப்புக் கருதி மஹிந்த உரை ரத்து
பதிந்தவர்:
தம்பியன்
05 June 2012
0 Responses to ஈழத் தமிழர்களின் தொடர் ஆர்ப்பாட்டம்: தற்பாதுகாப்புக் கருதி மஹிந்த உரை ரத்து