பிரித்தானியாவிலிருந்து ஜூன் மாதம் 2011 இல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட அகதி ஒருவர் இலங்கை அரசின் கோரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியப் பத்திரிகையான கார்டியனில் தனது சாட்சியைப் பதிவு செய்துள்ளார்.
பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னை நாள் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உள்ளானார்கள் என கார்டியன் நாளிதழுக்கு இவர் தெரிவித்துள்ளார்.
பல மாதப் பயணத்தின் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்துள்ள இவர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை அழைத்து கௌரவிக்கும் பிரித்தானிய அரசு, உயிர் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அகதி அந்தஸ்து கோரிய ஈழத் தமிழர்களை மட்டும் கட்டாயமாகத் திருப்பி அனுப்புகிறது.
கடந்த வாரமும் 36 பேர்களை நாடுகடத்தியமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதைக்குட்பட்ட பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதி
பதிந்தவர்:
தம்பியன்
06 June 2012
0 Responses to சித்திரவதைக்குட்பட்ட பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதி