Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேலம் அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு வசதிகள் சரியாக இல்லாத காரணத்தால் அவரை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறைக்கு சென்று தி.மு.க. தலைவர் கலைஞர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக சிறைச்சாலை முன்பு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். கட்சியினரும் அங்கு திரண்டு நின்றனர்.

ஆனால் காலை 8 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகம் திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் புழல் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் அழைத்துச் செல்லப்பட்டார்.

கலைஞர் வரப்போவதாக பரவிய தகவலை தொடர்ந்து புழல் சிறை முன்பு அவரை காண்பதற்காக இன்று காலை 10 மணி வரையிலும் தொண்டர்கள் வந்து சென்றனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதயநோயாளியான வீரபாண்டி ஆறுமுகம் வேண்டு மென்றே அழைக்கழிக்கப்படுவதாகவும், தான் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திப்பதை தடுப்பதற்காகவும் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கலைஞர் தெரிவித் துள்ளார். மாற்றம் செய்யப்படுவது சேலம் சிறைக்கா அல்லது வேலூர் சிறைக்கா என்று கூட வீரபாண்டி ஆறுமுகத்திடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

0 Responses to நான் சந்திப்பதை தடுப்பதற்காக வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூர் சிறைக்கு மாற்றிவிட்டனர்: கலைஞர் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com