பர்மீய எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ சி அம்மையார் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான நான்கு நாள் விஜயமொன்றைத் துவங்கியுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் ஒன்றாக இவர் உரையாற்றவிருப்பதுடன் ராஜ குடும்பத்து உறுப்பினர்களையும் சூ சி சந்திக்கிறார்.
தனது 67ஆம் பிறந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று பிபிசியின் பர்மீய சேவையையும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்துக்கும் அவர் வருகை தருகிறார்.
1988ஆம் ஆண்டுக்குப்பின் சூ சி ஐரோப்பா வருவது இதுவே முதல்முறை. கடந்த 24 வருடங்களில் பெரும்பகுதியை வீட்டுக் காவலில் கழித்தவர் ஆங் சான் சூ சி. 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் விடுவிக்கப்பட்டார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் தனக்கு அளிக்கப்பட்ட நொபெல் அமைதிப் பரிசுக்கான ஏற்புரையை அவர் சில தினங்கள் முன்புதான் ஒஸ்லோவில் வழங்கியிருந்தார். சூ சியின் வெளிநாட்டுப் பயணங்கள் பர்மாவில் அரசியல் ரீதியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருவதன் கூடுதல் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.



0 Responses to ஆங் சான் சூ சி ஐக்கிய ராஜ்ஜியம் வருகை