Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Fredericia ,நகரில் கற்றலுக்கான வழிகாட்டுதல் தினம் திசைகள் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. தமிழ் இளையோருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் டென்மார்க்கில் உள்ள உயர்கல்வி, மற்றும் பட்டப்படிப்புகள் பற்றிய தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தது.

உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பு கற்றுக் கொணடிருக்கும் தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, தமது கல்விகளை பற்றிய தகவல்களையும், ஆலோசனைகளையும், தமிழ் மொழியிலேயே பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மருத்துவம் ((medicin), பொறியியல் (ingeniør), பொருளாதாரம் (økonomi), சர்வதேச அபிவிருத்தி internationale udviklingsstudier), வர்த்தக தொடர்பு (virksomhedskommunikation), பொது சுகாதார விஞ்ஞானம் (folkesundhedsvidenskab) அரசியல் அறிவியல் (statskundskab) மற்றும் பல கல்விகளை பற்றிய தகவல்கள் வருகை தந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் திசைகள் அமைப்பினரால் அழைக்கப்பட்டிருந்த இளம் தமிழ் மருத்துவர் ஒருவரால் நீரிழிவு நோயினை பற்றிய விளக்கங்களும், ஆலோகனைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு வருகை தந்து, தம் கல்விகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோருக்கும், வருகை தந்து சிறப்பித்த பெற்றோர்கள் மற்றும் இளையோருக்கம், திசைகள் இளையோர் அமைப்பினர் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு, இந்நிகழ்வு வருகை தந்திருந்த அனைவருக்கும் பிரயோசனம் உள்ளதாக அமைந்திருக்கும் என்றும் நம்புகின்றோம்.

இவ்வருடம் இரண்டாவது முறையாக இந்நிகழ்வு திசைகள் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. முதலில் Nyborg நகரில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இந்நிகழ்வை வௌ;வேறு நகரங்களில் நடாத்தும் நோக்கம் திசைகள் அமைப்பினருக்கு உள்ளது. எனவே உங்கள் நகரங்களில் இந்நிகழ்வை நடாத்த விரும்பினால், திசைகள் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும்.

0 Responses to Denmark - Fredericia ,நகரில் கற்றலுக்கான வழிகாட்டுதல் தினம் திசைகள் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com