மகிந்த ராஜபக்ச அண்மையில் கியூபாவுக்குச் சென்றிருந்த போது, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவைச் சந்திக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச பிடெல் காஸ்ட்ரோவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உயர்மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
தமது முயற்சிக்கு கியூபாவின் உயர்மட்டத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிடெல் காஸ்ட்ரோ நோயுற்றதால் அவர் விருந்தினர்களைச் சந்திக்காமல் தவிர்த்திருக்கக் கூடும் என்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தமக்குத் தாமே சமாதானம் செய்து கொண்டுள்ளனர்.
பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்க மகிந்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி
பதிந்தவர்:
தம்பியன்
09 July 2012
0 Responses to பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்க மகிந்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி