கர்நாடகா, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தன. அங்கங்கு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தும், நதிகளில் நீர் நிரம்பி வழிந்தும் கனமழையை உறுதிப்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் வெளுத்து வாங்கிவருகிறது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால், லேத்ராவதி, துங்கபத்ரா நதிகள் நிரம்பி வழிவதாகத் தெரிகிறது. மங்களூர், சிக்மங்களூரில் கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சிக்மங்களூர், தர்மசாலா போக்குவரத்து சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் சரசரவென உயர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பருவ மழை இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் நீடிக்குமானால், கர்நாடக அரசு காவிரிக்குத் தண்ணீர் திறந்துவிட்டே ஆகவேண்டும் என்கிற நிலை வரும் என்றும் தெரியவருகிறது.
இந்த தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும் தொடர்வதால், அங்கும் நிலசரிவு, பெருக்கெடுத்தோடும் நதிநீர் வெள்ளம் என்று பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு மண்சரிவில் நான்கு பேர் பலியானதாகவும் தெரிய வருகிறது.கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதாகவும் தெரிகிறது.
0 Responses to கர்நாடகா கேரளாவில் கனமழை: 4பேர் பலி