Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழம் என்ற இலட்சியத்தில் விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வரும் சிவந்தன் கோபி தெரிவித்தார்.

கடந்தவார இறுதியில் தமிழ்நெட் இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சில சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் காந்திய வழியில் போரட வேண்டும்” என்ற கருத்தினை எரிக் சொல்கெய்ம் போன்ற மேற்கத்தைய இராஜதந்திரிகள் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வந்தாலும், தமிழீழம் என்ற இலட்சியத்தில் விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமில்லை என தெரிவித்தார்.

இன்று பதினாறாவது நாளாக அவரது போராட்டம் தொடர்ந்து வருகிறது. காலநிலை அடிக்கடி மாற்றமுறுகின்ற போதிலும், ஒரு சிறு கூடாரத்தினுள் தங்கியிருந்தபடி குளிரிலும், வெயிலிலும் திரு. சிவந்தன் தனது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

பிரித்தானியாவில் செயற்படும் தேசிய மாணவர் கூட்டமைப்பு, Occupy London போன்ற அமைப்புகளும் திரு. சிவந்தனின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக திரு. சிவந்தனுக்கு ஆதரவு வழங்குவதற்காகக்கூடும் மக்களின் தொகை அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

0 Responses to தமிழீழம் என்று இறுதி இலட்சியத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லை!: சிவந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com