ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்காவும், ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூனும் அழுத்தம் கொடுத்ததாக இன்னர்சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஐ.நா அமைப்பில் வேறு ஒரு உயர் பதவியை வழங்குவதாக தெரிவித்து, பதவியை இராஜினமா செய்யுமாறு கோரப்பட்டதாகவும், எனினும், இதனை நவநீதம்பிள்ளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், தனக்கு வழங்கப்படும் அழுத்தத்தை பகிரங்கப்படுத்த போவதாக அச்சுறுத்தியதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
இதனாலேயே அவரது நான்காண்டு கால இரண்டாவது தவணை பதவிக்காலம், இரண்டு ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது எனவும் ஊடகத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதேவேளை இவ்வாறு தம்மிடம் எவரும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுவிக்கவில்லை என நவநீதம்பிள்ளை மறுப்பு தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு பான்கீ மூன், அமெரிக்கா அச்சுறுத்தல்?
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2012
0 Responses to நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு பான்கீ மூன், அமெரிக்கா அச்சுறுத்தல்?