ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம் 900 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது. சூரிச்சில் தமிழ் உணர்வாளர்கள் வாழ்த்தி விடைகொடுத்தனர்.
ஒன்பதாவது நாள் சப்கவுசன் மாநிலத்திலிலிருந்து ரப்பர்ஸ்வீல் ஊடாக பயணத்தைத் தொடர்ந்த வைகுந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
மக்களின் ஆதரவு குறிப்பிட்ட சில மாநிலங்களில் கிடைக்கவில்லை.
ஆகவே! 11.08.2012 அன்று வின்ரத்தூரில் தமிழீழக் கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியில் மாலை ஐந்து மணியளவில் இந்தப் பயணத்தை முடிக்கின்ற போது மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோரிக்கைகளை வலுவாக்க முடியும்.
எனவே மக்கள் ஆதரவு முக்கியமாகும் எனத் தெரிவித்தார்.
பத்தாவது நாளாக தொடரப் போகும் விடுதலை நோக்கிய பயணம் சூரிச்சைச் சூழவுள்ள பல இடங்களிற்கும் செல்லவுள்ளது.
விளையாட்டுக் கழகங்கள், ஆலயங்கள் ஆகியவற்றின் அழைப்புக்களும் இருப்பதனால் குறிப்பிட்ட சில இடங்களிற்கு மட்டும் தான் செல்லமுடியும் எனத் தெரிவித்த வைகுந்தன், பயணத்தை நிறைவு செய்கின்ற நாளைத் தொடர்ந்தும்..... கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் கையொப்பம் இட்டு கையொப்பத்தை அதிகமாக்கிக் கொண்டால் அது முன்வைக்கப்படும் கோரிக்கை பற்றிய கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே அதற்கும் மக்கள் ஆதரவு அவசியம் என வைகுந்தன் பத்தாவது நாளாகவும் விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடர்கின்ற போது தெரிவித்தார்.
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம் 900 கிலோ மீற்றரைத் தாண்டி தொடர்கின்றது!
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
0 Responses to ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம் 900 கிலோ மீற்றரைத் தாண்டி தொடர்கின்றது!