டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
இந்தியா சுதந்திரப் போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்தக் கடிதத்தின் தாக்கம் உள்ளது.
டெசோ என்பது தமிழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல.
ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஈழம் என்ற வார்த்தைக்கு தடை விதித்தமைக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
0 Responses to ஈழம் என்ற வார்த்தைக்கு தடை விதித்தமைக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம்