கோபி சிவந்தன் அவர்கள் கடந்த இருபத்திரண்டாம் நாள் ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் கிராமத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்றுடன் இருபதாவது நாளாக உறுதியாக தொடர்ந்து வருகின்றார்.
இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு கோபி சிவந்தனுக்கு தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய முயற்சிகளுக்கு உற்சாகமளிபோம்.
அத்துடன் பிரித்தானியாவில் நடைபெறும் ஒலிம்பிக் நிகழ்வுக்காக பல நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் வருகை தந்திருப்பதால், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச பயங்கரவாதிகளினால் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைகளை வெளிக்கொண்டுவரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, சிறிலங்காப் படைகளால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலிலே 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதையும், 1,46, 679 மக்களும் காணாமற் போயுள்ளதையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவோம்.
இவ் உண்ணா நிலைப்போராட்டம் எதிர்வரும் 12ம் திகதி ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து நடை பெறுவதனால் அனைத்து தமிழ் மக்களையும் இதில் உணர்வுடன் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவை
கோபி சிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்: பிரித்தானிய தமிழர் பேரவை
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
0 Responses to கோபி சிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்: பிரித்தானிய தமிழர் பேரவை