டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது, இலங்கை அரசியல் வாதிகள் பலர் டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டோம் என பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு இருக்கின்றது.
இந்நிலையில், நேற்று இரவு இந்திய தொலைக்காட்சியான ‘’புதிய தலைமுறை’’ யில் நடந்த டெசோ மாநாடு குறித்து பேசும் ஒரு நிகழ்ச்சியில், அழகிரியும், தமிழருவி மணியனும் கலந்துகொண்டு கலந்துரையாடினார்கள்.
இவ் டெசோ மாநாடு முக்கியமான மாநாடு. இலங்கைத் தமிழர்கள் பற்றி கலந்துரையாட கிடைத்த ஒரு தளம் என கூறிய அழகிரியிடம்,
இலங்கைத் தமிழர்களுக்கு முக்கியமான மாநாடு என கூறுகின்றீர்கள் ஆனால் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என பல நெருக்கடிகள் உருவாகியுள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு,
ஈழம் என்பதை நாங்கள் பேசலாம். ஆனால் உலகத்தில் அதிகாரபூர்வமாக எதுவும் இல்லை. அது நமது ஆவல், இலக்கு, கருத்து. அதைச் சொன்னவர்களின் இலட்சியம் அது. ஈழம் என சொன்னவர்களின் இலட்சியமே ஈழம் தவிர, அதை ஒரு நாடோ உலகமோ ஏற்றுக்கொண்டதாக சொல்லமுடியாது. ஈழம் என்று ஒன்று உருவாகினால், அதன்பின்னர் ஈழம் என அதிகாரபூர்வமாக உரையாடலாம் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை இதைத்தான் கலைஞரும் சொல்கிறார் என பதில் அளித்திருந்தார்.
’’ஈழம்’’ என்பது உலகத்தில் அதிகாரபூர்வமாக இல்லை: சொன்னவர்களின் இலட்சியமே ஈழம் - அழகிரி
பதிந்தவர்:
தம்பியன்
11 August 2012
0 Responses to ’’ஈழம்’’ என்பது உலகத்தில் அதிகாரபூர்வமாக இல்லை: சொன்னவர்களின் இலட்சியமே ஈழம் - அழகிரி