சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறைதான் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்தது.
இதுபற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாள ர்களிடம், ‘’டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடை பெறும். மாநாடு நடைபெறுவதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி தருவார் என நம்புகிறோம். யார் பேச்சையும் கேட்டுக்கொண்டு போலீஸ் செயல் படக்கூடாது.
காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
ஈழம் என்ற சொல் பழங்காலம் முதலே பயன்படுத் தப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன’ என்றார்.
ஒருவேளை டெசோ மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி தர மறுத்தால் தடையை மீறி மாநாடு நடக்குமா? என்று கேட்டபோது, தடைக்கற்களும் படிக்கற்களாகும்’’ என்று கூறினார்.
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது: கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
0 Responses to டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது: கலைஞர்