சிறிலங்கா இராணுவம் 2009 மே மாதம் அளவில் வன்னியின் முள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் அவர்களைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா அரசு இனப் பிரச்சனையை மட்டும் தீர்க்கவில்லை. இந்தியாவின் கவலையையும் சேர்த்தே தீர்த்து விட்டுள்ளது.
இதற்குக் காரணமான சிறிலங்காவின் அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு இந்திய அரசு உயரிய விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சமீபத்தில் கூறியுள்ளார். சிறிலங்கா இராணுவம் கொழும்பில் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் மஹிந்தவைச் சந்தித்த இவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொழுதே இவ்வாறு கூறியுள்ளார்.
இவர் மேலும் கருத்துரைக்கையில் தீவிரவாதத்துக்கு எதிராக சிறிலங்கா பெற்ற வெற்றி 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வெற்றி என்றும் கூறினார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு இந்தியா விருது வழங்க வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
porukki porampokku ivanai ellam seruppala adikkanum.....