அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் குருத்வாரா தாக்குதல் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் கோவிலான குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 7பேரில் 6பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டுமென அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
எஸ்.எம். கிருஷ்ணா தொலைபேசி மூலம் ஹிலாரி கிளிண்டனிடம் இது பற்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி தரவேண்டுமெனவும் கேட்டிருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஹிலாரி கிளிட்டனும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பிரதமர் மன்மோகன் சிங் இச் சம்பவத்திற்கு தனது கண்டனத்தையும் வருத்தத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா சீக்கியக் கோயிலான குருத்வாராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அமெரிக்க அரசு அலுவலகங்களில் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
குருத்வாரா தாக்குதல்: முழுமையான விசாரனை நடத்த இந்தியா வலியுறுத்தல்
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2012
0 Responses to குருத்வாரா தாக்குதல்: முழுமையான விசாரனை நடத்த இந்தியா வலியுறுத்தல்