Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னையின்றி தொழில் செய்வது தமிழக மீனவர்கள் கையில் தான் உள்ளது என இலங்கை மீன்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணி முத்து தெரிவித்துள்ளார்.

நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்தோனி முத்து,

இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இப்போது தான் இலங்கை மீனவர்கள், மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக மீனவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பாக் ஜலசந்தி கடலில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்து காண்பிக்கப்பட்டது. எனினும் இன்னமும் இந்த பிரச்சினை தொடர்கிறது. தடை செய்யப்பட்ட வலைகள், கண்ணி வெடிகளுக்கு சமம். கடல் வளம் அழிவதுடன் எதிர்காலத்தில் கடலில் பல ஆபத்துக்கள் உருவாகும்.

இதனால் தடை செய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் கைவிட வேண்டும். இந்திய - இலங்கை மீனவர்களின் ஒத்துழைப்பில் சமுதாய மேடை எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் செயற்படாமலிருக்கும் இந்த அமைப்பு மீள இயங்கவைக்கப்படவேண்டும். இரு நாட்டு மீனவர்களும் கடற்பகுதியில் பிரச்சினையின்றி தொழில் செய்வது தமிழக மீனவர்கள் கையில் தான் உள்ளது என்றார்.

0 Responses to இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையின்றி தொழில் செய்வது தமிழக மீனவர்களின் கையில் உள்ளது: அந்தோனி முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com