பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈழத்தமிழரான செந்தூரன் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
ஈழத்தமிழரான செந்தூரன் இதற்கு முன்பு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அவர்களை விடுதலை செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு முகாமில் உள்ள யாரையும் இதுவரை விடுதலை செய்யவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு கியூ பிரிவு காவல் துறை, நான்கு பேரை விடுதலை செய்து விட்டு மீண்டும் வேறு நான்கு பேர்களை கைது செய்து முகாமில் அடைத்தது.
செந்தூரன் மிக கடுமையாக போராடியதால் அவர் பூந்தமல்லி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த முகாமில் தரை சிமெண்டால் பூசப்பட்டுள்ளது. கூரை முழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளது. எட்டு பேர்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமிற்கு 120 காவல் துறையினர், இரண்டு அடுக்குகளாக காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சிறைச்சாலையை விட கொடுமையாக பராமரிக்கப்படுகிறது இந்த பூந்தமல்லி சிறப்பு முகாம். மரங்கள் பக்கம் கூட இவர்களால் போகமுடியாது. கட்டிடத்திற்கு உள்ளேயே அடைபட்டு இருக்க வேண்டும்.
மிருங்கங்கள் கூட இங்கு பல நாட்கள் தங்காது. இதனால் மனம் உடைந்த செந்தூரன், தன்னையும் தன்னோடு முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கி உள்ளார்.
தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இவருக்கு இந்த போராட்டத்திற்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2012
0 Responses to பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்