ஆப்கானிஸ்தானின் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க இராணுவத்தினர்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஆக உயர்வடைந்துள்ளது.
2014ம் ஆண்டுக்கு முடிவதற்குள் நேட்டோ படை மற்றும் அமெரிக்க படை அனைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவுள்ள நிலையில், சமீபகாலமாக அமெரிக்க படையினர் மீதான தாக்குதல் அங்கு அதிகரித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தனைன் வர்டாக் மாகாணத்தில் இராணுவ முகாமில், நடைபெற்ற திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், இரண்டு அமெரிக்க படைகளும், சில ஆப்கானிஸ்தான் படைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2001ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படைகளில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஐ எட்டியுள்ளது.
சிலவேளைகளில் ஆப்கான் படையினருக்கும் - அமெரிக்க படையினருக்கும் இடையில் தவறுதலான புரிந்துணர்வுகள் காரணமாகவும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுவருவதாகவும், இவ்வாறான உள்ளக தாக்குதல்களிலேயே அதிகமானோர் கொல்லப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளூர் இராணுவவீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்துவிட்டே அங்கிருந்து தாம் வெளியேற முடியும் என அமெரிக்க படைகள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் இதுவரை கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் 2000!