Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீரில், நீண்ட நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரி தலைவர்களுடனும், ஹுரியாத் சேர்மென் உமர் ஃபரூக் உடனும், பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், காஷ்மீரில் அரசியல் தார்மீக மற்றும் இராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு என்றும் தொடரும். சுதந்திரத்திற்கான அவர்களது எண்ணற்ற தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் இந்தியாவுடன் வெளிப்படையான தொடர்ச்சியான உரையாடல் நடத்தல், காஷ்மீர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு உகந்த சூழலை உருவாக்கி கொடுக்கும் என்றார்.

கடந்த ஆறு தசாப்தகாலங்களாக காஷ்மீர் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் நடத்தி பெரும் இழப்புக்களையும், மனித உரிமை மீறல் பாதிப்புக்களையும் அனுபவித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சர்வதேச சமூகம், காஷ்மீர் மக்களின் நிலைமீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானி கார் மற்றும் அமெரிக்க தூதுவர் ஷெரி ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 Responses to காஷ்மீர் பிரச்சினைக்கு நீண்ட நிலையானதொரு தீர்வு வேண்டும்: பாகிஸ்தான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com