இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர உலக தமிழர் பேரவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் உலக தமிழர் பேரவையும்
அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கை சபையும், அமெரிக்காவின் 31
சட்டவாதிகளின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளன.
இந்த 31 சட்டவாதிகளும் கடந்த வாரத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவனத்தில் எடுக்குமாறு சட்டவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடைசியாக இடம்பெற்ற காங்கிரஸின் அமர்வின் போதே இந்த கடிதம் கையளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அமெரிக்க சட்டவாதிகள், இலங்கை தமிழர்களின் விடயத்தில் இதற்கு முன்னர் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் வகையில், உலக தமிழர் பேரவையின் குழு ஒன்று வணக்கத்துக்குரிய தந்தை எஸ்.ஜே இமானுவேலின் தலைமையில் கடந்த வாரம் தென்னாபிரிக்கா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் பல உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

0 Responses to இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் உலக தமிழர் பேரவை