Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போராட்டத்தையும் பயங்கரவாதத்தையும் இணைத்து உலகம் பார்த்ததாலேயே, முள்ளிவாய்க்கால் கொடூரங்களை உலகம் அனுமதித்தது. அத்தோடு விடுதலைப் புலிகளை எதிர்க்காது இருந்தமையினாற் தான் தமிழர் தேசியக் கூட்டமைப்பைக் கூட ஆரம்பத்தில் இந்தியப் பிரதமர் கூட சந்திக்க மறுத்து வந்தார்.
பயங்கரவாதத்தையும், போராட்டத்தையும் வேறுபடுத்திப் பார்க்க அன்று உலகம் தவறியது. இன்று மீண்டும் அதே தவறை உலகம் தொடர்கிறதாகவே தோன்றுகிறது.

இதையே தமிழரின் பிரிவினைக் கோரிக்கையை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தி, அவர்கள் பயங்கரவாதிகள் என்று நம்புவதால் தமிழரின் ஜனநாயக வழியலான தமிழரின் இறைமை தொடர்பான வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை உலகம் நிராகரிப்பது ஜனநாயகமாகாது. நியாயமுமாகாது.

நாடு கடந்த அரசினரைச் சந்திக்கவும், பேசவும் அனேகமான நாடுகள் மறுப்பதன் தார்ப்பரியம் இது தான். இதை அழுத்தம் என்பதை விட தாயகத்தை மீளக் கேட்பதை “ ஒரு புதிய பிரிவினைக் கோஜமென “ உலகம் கணிக்கும் தவற்றின் தொடரச்சியாகவே பார்க்க வேண்டும்.

ஏனென்றால், வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் அங்கீகாரம் பெற்ற போது புலிகள் இல்லை. ஆயுதப் போராட்டக் குழுக்கள் எதுவும் போராடவுமில்லை.

தமிழரிழன் இறைமை தொடர்பான, சுய நிர்ணய அடிப்படையிலான இந்த தமிழரின் கனவுக் கோரிக்கையை, தேர்தல் மூலம் வெளிப்படுத்தி அங்கீகாரம் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அங்கீகரிக்க சிறீலங்கா அரசு மறுத்தமையினால் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டியிருந்தது.

இது ராஜீவ் காந்தியின் மரணத்துடன் பயங்கரவாதமென பரவலாக ஏற்கப்பட்டது. இதனை சாட்டாக்கி முள்ளிவாய்க்கால் வரை சிறீலங்கா இலகுவாக தனது நாடகத்தை சர்வதேச மட்டத்தில் அரங்கேற்றி வந்தது. இன்று நாடு கடந்த அரசையும் புலிகளையும் ஒன்றெனக் கூறி நாடு கடந்த அரசை அங்கீகரிக்க மறுக்கிறது.

நியாயமாக சில நாட்டின் பிரதிநிதிகள் நாடு கடந்த அரசினருடன் பேசிய போது விடுதலைப் புலிகள் உலக நாடுகளினால் தடை செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி விடுதலைப் புலிகளை முதன்மைப் படுத்த வேண்டாம் எனக் கோரி வந்தனர்.

ஆனால் அந்த நிலைப்பாட்டை இந்தியாவும் சிறீலங்காவும் வலியுறுத்தியே வருகின்றன. நாடு கடந்த அரசினர் கொடியில் ஏற்படுத்திய மாற்றத்தை உலகம் ஏற்காது புலிகளாகவே நாடு கடந்த அரசினரைக் கருதுகிறது.

இந்த நிலையில் நாடு கடந்த அரசிற்கு சில நாடுகள் அழுத்தம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தச் செய்தியை எந்த நாடும் வெளியிடவுமில்லை உறுதி செய்யவுமில்லை. உண்மையில் இதை பிரிவினைக் கோரிக்கையை சர்வதேசம் ஏற்க மறுப்பதாகவே மொழி பெயர்க்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் ராஜீவ் காந்தி மரணத்தின் ஊடாகவே விடுதலைப் புலிகளை மட்டுமன்றி , தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் உலகம் இன்னும் பாரக்கிறது. இதனாற் தான் முத்துக்குமாரினதும், முருகதாசனினதும் தீக்குளிப்பு மரணங்களைக் கூட உலகம் நம்பவும் எற்கவும் மறுத்தது.

இதே தீக்குளிப்புக்கள் இன்று வரை தமிழகத்தில் தொடர்ந்தும் உலக மன நிலையில் மாற்றம் ஏற்படுவதாக இல்லை. எனவே தீக்குளித்து தமிழராகிய நாம் அநியாயமாக அழிவதை நிறுத்தி உண்மையை உரைக்க புலம்பெயர் தமிழர்கள் முனையவேண்டும்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருதுவது வேறு, ஈழத் தமிழர்களின் ஈழக் கோரிக்கை வேறு. இரண்டையும் ஒன்றாக்கி மேலும் இன அழிப்பை உலகம் தொடர அனுமதிக்கக் கூடாது.
நாடு கடந்த அரசு இலங்கைத் தீவுள் ஈழத் தமிழர் போராட அரசியல் வெளியில்லை சுதந்திரமல்லை என்பதை தெளிவுபடுத்தியே வெளிநாடுகளில் ஈழக் கனவை கைவிடாது தொடர்வதாக பகிரங்கமாக கூறினர்.

ஆனால் நாடு கடந்த அரசினர் தமது அரசியலை தொடர வெளிநாடுகளில் சுதந்திரம் உள்ள போதும் உலக அரச மட்டங்களில் அதற்கான ராஜீக வெளி இல்லாமலே உள்ளது. அதனையே நேற்றைய செய்தி காட்டுகிறது. தவிர நாடு கடந்த அரசின் தலைவரின் தாயகத்தில் அரசியல் வெளியில்லை என்ற கூற்றை கிழக்கு மாகாண தேர்தல் மோசடி உறுதி செய்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியைச் சந்தித்த போது பிள்ளையானின் வெற்றி ஒரு மோசடி என்று தெரிவித்திருந்தததாக செய்திகள் வெளியாகியும் இருந்தன. இதனை கருணாவும் உறுதி செய்துள்ளார்.

இந்த உண்மைகளையும் பண்டைய வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தி நிரூபிப்பதே இன்றைய புலம்பெயர் தமிழரின் சவாலாக தோன்றுகிறது. ஆனால் உலகோ, இன்று வரை, வெளிநாடுகளிலிருக்கும் தமிழர்கள் தமது பழைய நாட்டை கேட்கும் தமிழரின் இறைமையை உலகம் அனுமதித்து அங்கீகரிக்க மறுக்கிறது. அவர்களை எஞ்சியுள்ள புலிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றே உலகம் கணிக்கிறது.

எனவே இன்றைய நிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திலிருந்த தான் மீண்டும் அரசியலைத் தொடர வேண்டியுள்ளது.

வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு புத்துயிர் வழங்கவே புலம்பெயர் தமிழர்கள் அதற்கான ஒரு வாக்களிப்பையும் நடாத்தியிருந்தனர். அந்தக் கோணத்திலான நகர்வைத் தான் அங்கீகரிக்குமாறு கோருவதே இலகுவானது. இப்போது இறுக்கமாக இருந்தால் அரசியல் வங்குரோத்து நிலை தோன்றும்.
தீவிற்குள்ளும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழர் அரசியலைத் தொடர முடியாது. அவல நிலையில், பலமுமற்று இருக்கும் தமிழரின் அழிப்பு அதே வேகத்தில் இலங்கைத் தீவுள் தொடரும் என்பதாலும் தான் கூட்டமைப்பினர் தமது வட்டுக் கோட்டைத் தீர்மானத்தையே முன்னெடுக்காது, பிராந்திய சக்தியான இந்தியாவுடனும் . மேற்குலக சர்வதேச நாடுகளுடனும் உறவை பேணி வருகின்றனர்.

இதனை புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் இன்றைய நிலையில் தேiவாயன ராஜ தந்திரம் என்று ஏற்கும் போது . உயிர்களை தியாகம் செய்த மறுபிரிவினர் ஏற்க முயடிhத மனோ நிலையில் உள்ளனர். இதனை அவர்கள் இலட்சியத்தை கைவிட்ட உறுதியற்ற தன்மையாகவே கணிக்கின்றனர்.

இதையே, சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் திரு ஜீ எல் பீரீஸ் அவர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத வெளிநாட்டுத் தமிழர் என்று உருவகப்படுத்தி பலமாக அன்மைக் காலங்களில் உலக மட்டத்தில் பரப்புரை செய்து வந்துள்ளார்.
எனவே உலகம் உண்மைகளை ஏற்க மறுக்கும் இந்த நிலையில் தமிழர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்பது பற்றியே இன்று கலந்துரையாடப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் உணர்வு பூர்வமான முடிவுகளை விடுத்து நமது தாயகம் கேட்கும் இதயங்களை நாங்களோ எதையும் தாங்கென அமுக்கி, தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் வழியில் செல்வதா அன்றில் செய்து முடி அல்லது செத்து மடி என முருகதாசன் முத்துக்குமார் வழியில் தொடர்வதா என்பதை புலம் பெயர் தமிழர்கள் ஒவ்வொருவருமே தாங்களாக முடிவு செய்ய வேண்டும்.

காந்தீயவழி அடக்கி ஆள ந்pனைத்த ஆங்கிலேயர் முன்னிலையில் பலனைத் தந்தது. ஆனால் தமிழ் இனத்தை அழிக்க வாளேந்தியபடி நிற்கும் சிங்கத்தின் முன்னால் தமிழராகிய நாம் என்ன செய்யலாம் என்பதே இன்றைய தமிழரின் கேள்வியாக முடியும்? இதற்கு பதிலை வழங்கி உறுதியுடன் செயற்பட்டவரே தலைவர் பிரபாகரனும் அவரது படையினருமாகும்.

தந்தை செல்வாவின் அறப் போராட்டமான ஈழத் தமிழரது சத்தியாக் கிரக உரிமைப் போராட்டம் இராணுவத்தால் மழுங்கடிக்கப்பட்டதால் தமிழர்களிற்கு இராணுலம் தேவைப்பட்டது. அந்த இராணுவமே புலிகளாகினர். ஆனால் இந்தியா காரணமாக மறப் போராட்டம் செய்த புலிகளை உலகமும் சேர்ந்து அழித்து ஒழித்து விட்டது.

இதற்கு மேல் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பதை தமிழர்களே கலந்துரையாடி முடிவு செய்ய வேண்டும். அது விவேகமும் , தற்பாதுகாப்பும் வேண்டிய நிகழ் மற்றும் எதிர் காலம் தொடரட்பானதாக அமைய வேண்டுமா? அல்லது கடந்த கால அநியாயங்களின் பாதிப்புக்களின் மேல் ஏறி நின்று நாம் உணரச்சி வேகத்துடன் எடுக்க வேண்டுமா? என்பதே நம் இனம் எதிர்கொள்ளும் இக்கட்டான கேள்வியாகும்.

தமிழர்களின் அறிவிற்கும் உணரச்சிக்குமான , மூளைக்கும் இதயத்திறகுமான இந்தப் போட்டியில் என்ன முடிவு எடுக்கலாம் என்று என்னிடம் கேட்டால் நான் எதையும் சொல்லமாட்டேன். நான் தேர்தல்களில் போட்டியிடவுள்ள வேட்பாளணோ அரசியல்வாதியே இல்லை. இருந்தாலும் அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். அதற்கான பதிலை ஒவ்வொரு தமிழரிடமும் சுய முடிவிற்காக விட்டு விட வேண்டியது தான்.

ஒரு மருத்துவ விஞ்ஞானக் குறிப்பை மட்டும் என்னால் ஞாபகப்படுத்த இயலும். ஒரு மனித உடல் மரணிக்கும் போது இறுதியாக செயல் இழபப்பது மனித மூளை தான். ஏனென்றால் இதயத்திற்கும் கட்டளைகளை வழங்குவது மனித உடலில் மூளை தான். தமிழராகிய நாங்கள் இதயபூர்வமான உணரச்சி வேக முடிவுகளை எடுக்கப்போகிறோமா? அல்லது மூளையின் உலகாயுத யதார்த்த அறிவார்ந்த விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டுமா என்பதே நம் முன்னே நிற்கும் கேள்வியாகும்.
இதயத்தின் உணர்ச்சியா? நமது மூளையின் அறிவா ? நமது இறுதி முடிவு என்ற கேள்வியின் நாயகர்களான புலம்பெயர் தமிழர்களே இந்தக் கேள்விக்கான பதிலை சுயமாக தாங்களாக சென்றடைய வேண்டும். வழி நடாத்த வன்னி இல்லை. தலைமைகளும் இல்லை. எனவே சுயமாக சிந்தித்து தமிழர்களே முடிவை எடுக்க வேண்டிய நேரமிது. விலகி ஒதுங்காது ஒரு நல்ல முடிவை எடுப்பவர்களிற்கு தமிழ்த்தாயின் நன்றிகள் உரித்தாகுக!

0 Responses to வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் உலகம் ஏற்க மறுக்கிறதா? - குகதாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com