Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐ.நா அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில், இலங்கை மனித உரிமைகள் விசேட பிரதிநிதியும், அமைச்சருமான மகிந்த சமரசிங்கவை சந்தித்தார் பான் கீ மூன்.

அப்போது, இலங்கையின் எல்லா இனங்களுக்கும், நீதியையும், சமத்துவத்தையும், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்டையும் உறுதிப்படுத்த சுதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான பொறுப்புக்கூறலுக்கான சட்டக்கடமைகள் நிறைவேற்றபப்ட வேண்டும். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தி உரிய நீதி பெற்றுத்தர வேண்டும். இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அரசியல் தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில், இலங்கை தரப்பில் மகிந்த சமரசங்கவுடன், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித கோஹன்னவும் கலந்து கொண்டார். ஐ.நா தரப்பில், பான் கீ மூனுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதி ஐவன் திமோனேவும் பங்கேற்றார்.

0 Responses to இலங்கை போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நீதி வேண்டும் : பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com