Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மராட்டிய மாநில நீர்ப்பாசனத்துறை ஊழலில் நிதின் கட்கரிக்கும் பங்கு உண்டு என்று சொல்லியிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக தலைவர் நிதின் கடகரி மீது மேலும் பல குற்றசாட்டுக்களை வைத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த கெஜ்ரிவால், பாஜக எதிர்க்கட்சி என்பதை மறந்து செயல் படுகிறது. காங்கிரசுக்கு நிகராக பாஜகவும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. மராட்டிய மாநில நீர்ப்பாசன முறைகேட்டில் நிதின் கட்கரிக்கும் தொடர்பு உண்டு. அஜீத் பவாருக்கும், நிதின் கட்கரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் கூறியுள்ளார்.

மேலும், நிதின் கட்கரி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருவதாகவும் அத்தனைத் தொழில் நிறுவனங்களுமே சுற்று சூழல் கேடு விளைவிப்பதாகவும், இதை மராட்டிய அரசு கண்டு கொள்வதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். விதர்பா மாவட்டத்தில் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் அபகரிக்கப் பட்டு அது நிதின் கட்கரிக்கு முறைகேடாக வழங்கப் பட்டுள்ளது என்றும், இந்த கோப்பில் அஜித் பவார் கையெழுத்திட்டு உள்ளதாகவும் நிரூபித்து இருக்கிறார்.

வடேகன் அணையின் நீர் முழுவதும் நிதின் கட்கரி நடத்திவரும் அத்தனை தொழில் சாம்ராஜ்யத்துக்குமே சென்று சேர்வதாகவும் விவசாயிகள் விவசாயத்துக்கு நீர் இன்றி அங்கு தற்கொலைகள் நடப்பதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

0 Responses to மராட்டிய மாநில நீர்ப்பாசன ஊழலில் நிதின் கட்கரிக்கும் பங்கு உண்டு: கெஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com