Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராகுல்காந்தி மத்திய அமைச்சராவாரா?

பதிந்தவர்: தம்பியன் 17 October 2012

மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் நடைபெற இருக்கும் நிலையில், ராகுல் காந்தி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்ளக்கூடும் என ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். அடுத்து சோனியா காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்து உள்ளார். இருவருமே ராகுல் காந்திக்கு புதிதாக வழங்கப் படும் அமைச்சரவைப் பொறுப்பு குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். நாளை குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் சந்திக்க உள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி இப்போதே அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால்தான் 2014 இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அமைச்சரவையில் ராகுலுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் சோனியா காந்தி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதை அடுத்து ராகுல் காந்தி அமைச்சரவையில் பொறுப்பேற்க சம்மதித்து உள்ளதாகவும், இதுத் தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் ஆலோசனை நடத்த நாளை அவரை சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

0 Responses to ராகுல்காந்தி மத்திய அமைச்சராவாரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com