சென்ற 22.12.2012 சனி அன்று யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் „ஈழத்து திறமைகள்“ என்னும் நிகழ்வு பிராங்போர்ட் (Frankfurt) நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மங்களவிளக்கு ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு இவ் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களிடம் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக இவ் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்கள் ஆடல், பாடல், இசைக்கருவி மீட்டல் என பல வண்ண திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த நடுவர்கள் போட்டிகளை மதிப்பீடு செய்து போட்டியாளர்களை ஊக்குவித்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.
தனிப் போட்டியிலும் குழுப் போட்டியிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடையம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன் சிறந்த கருத்தாக்கத்திற்கும் கேடையம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஆரம்பமாகி முடிவடையும் வரை பார்வையாளர்கள் எழுந்து செல்லாமல் நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்து, இவ் நிகழ்வு வெற்றியளிக்க உறுதுணையாக இருந்தார்கள்.

Mayilrhythm did a great job
Mayilrhythm <3