“ஓயாத அலைகள் - 3” நடவடிக்கையில் காவியமான லெப். கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
பூநகரிப் பகுதியில்,
வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு) என்ற போராளியும்,
இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில்,
லெப்டினன்ட் பாணன் (நாதன்)
(சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி, கிளிநொச்சி) என்ற போராளியும்,
வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில்,
லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்)
(கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா)
லெப்டினன்ட் இசையழகன்
(நவரத்தினராசா நவநீதன் - செல்வபுரம், வவுனியா)
வீரவேங்கை இன்பன் (பாரதி)
(குலசேகரம் குகன் - நுணாவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதன் (துமிலன்)
(நாகரத்தினம் கஜன் - நீர்வேலி, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகளும்
மேஜர் மதன் (ரவியப்பா)
(முனியாண்டி மதியழகன் - முள்ளிக்கண்டல்,மன்னார்)
கப்டன் கர்ணன் (திண்ணன்)
(பாலசுப்பிரமணியம் பிரதீபன் - கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவள்
(தெய்வேந்திரம் சிவராஜினி - மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வள்ளி (நிலாஜினி)
(இராசரத்தினம் சுகந்தினி - கல்வயல்,யாழ்ப்பாணம்) ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
0 Responses to ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்