Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 2013 செனட் சபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈக்வடோர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் தேர்தலில் செனட் சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போகிறேன். அதற்காக புதிய கட்சி ஒன்றை தொடங்க போகிறேன் என அவர் கூறியுள்ளார்.

ஒரு மாகாணத்தின் வாக்களர் பட்டியலில் உள்ள 500 பேர் பரிந்துரைத்தால், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய அரசியல் கட்சி தொடங்க முடியும். விக்கிலீக்ஸ் இணையத்திற்கு 1.7 மில்லியன் உறுப்பினர்களும், 2.1 மில்லியன் பேஸ்புக் ஆதரவாளர்களும், ஆஸ்திரேலியாவில் தனக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இணையத்தளத்தின் ஊடாக முன்வருவார்கள் என அசாஞ்ச் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திறந்த அரசாங்கம் எனும் கொள்கை, தமது கட்சியின் நோக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கு பெரிய ஆதரவு உள்ள நியூ சவுத், வேல்ஸ் அல்லது விக்டோரியா மாகாணத்தில் அசாஞ்ச் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஆஸ்திரேலியா அரசியல் களத்தில் குதிக்கிறார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com