தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சம்பந்தன் கடந்த 07-12-2012 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த பின்வரும் கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கடுமையான அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
1. தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை.
2. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் அது மனித உரிமையையும் ஐனநாயகத்தையும் பின்பற்றவில்லை. அந்த இயக்கம் தமிழ், முஸ்லீம், சிங்கள தலைவர்களைக் கொலை செய்தது. அவர்கள் தெரிவு செய்து கொண்ட பாதையினால் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதாகிவிட்டது.
திரு. சம்பந்தன் அவர்கள் த.தே.கூவின் தலைவர் என்ற அடிப்படையிலும் அக்கட்சியின் கொள்கை வகுப்பாளர் என்ற வகையிலும் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளாகவே மேற்படி கருத்துக்களைக் கருத வேண்டும்.
இராணுவ வெளியேற்றம் தொடர்பில்
99வீதம் சிங்களவர்களால் நிரம்பிவழியும் சிறீலங்கா இராணுவம் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆக்கிரமிப்பு (ழுஉஉரியவழையெட யுசஅல) இராணுவமாகும். காரணம்; இச் சிறீலங்கா இராணுவமே தமிழ் தேசத்தின் இருப்பை அழிக்கும் அரசின் செயற்திட்டத்தில் ஓர் பிரதான கருவியாக இருக்கின்றது.
திரு சம்பந்தன் அவர்கள் இராணுவ வெளியேற்றத்தையன்றி இராணுவக் குறைப்பை மட்டுமே த.தே.கூ வலியுறுத்துவதாகக் கூறுவது தமிழ் தேசியவாதத்தின் ஆன்மாவைச் சிதைத்து அழிக்கத் துடிக்கும் சக்திகளுக்கு துணைபோவதாகவே அமைகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை 150 இராணுவத்தினரா அல்லது 150000 இராணுவத்தினரா நிலைகொண்டுள்ளனர் என்பது முக்கியமல்ல. என்ன எண்ணிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு அப்பால் அவர்கள் எதனைச் செய்வதற்கான ஆணையோடு தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதனையே நாம் முக்கியமாக கருத்தில் கொள்கின்றோம். இதன் காரணமாகவே தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினர் முழுமையாக வெளியேற வேண்டுமெனற நியாயபூர்வமான நிலைப்பாட்டை எமது கட்சி எடுத்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நியாபூர்வமானதும், நடைமுறைச்சாத்தியமானதுமான அரசியல் தீர்வான தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு, சிங்கள தேசத்துடன் இணைந்து உருவாக்கும் ஒரு நாட்டின் இராணுவமே எமது தேசத்தில் நிலை கொள்ளலாம்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தினரை முழுமையாக வெளியேறக் கோரவில்லை என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த போராட்டங்களில் கலந்து கொண்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவமே வெளியேறு என்று வலியுறுத்தி வருவது ஏன்?
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சியப்பன் அவர்களால் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்றாடப் பிரச்சினைகள் பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டபோது இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் உட்பட அங்கு கலந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் கையொப்பம் இட்டிருந்தன. அவ்வாறானதொரு கோரிக்கை உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் கூட்டமைப்புக் கட்சிகள் கையொப்பம் இட்டது எதற்காக?
மேற்படி போராட்டங்களில் முழுமையான இராணுவ வெளியேற்றத்தை வலியுறுத்தியதும், புதுடில்லி மாநாட்டில் இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டுமென்ற தீர்மானத்தில் கையொப்பமிட்டதும் தமிழ் மக்களை ஏமாற்றி போலியான முறையில், இதயசுத்தி இல்லாமல் அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவா என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.
த.தே.கூவின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் திரு. சம்பந்தனது இக்கருத்தோடு இன்றுவரை முரண்படாதபடியால் அவர்களும் திரு. சம்பந்தனது கருத்தினையே கொண்டுள்ளார்கள் என்பதோடு தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே இத்தகைய போராட்டங்களில் பங்குபற்றுகின்றனர் என்பதைத் தமிழ் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
இன்றைய முக்கியமான தேவை சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அழிப்பில் இருந்து தமிழ் மக்களை விடுவித்துக் கொள்வதாகும். அதனை செய்வதற்குப் பதிலாக அதே இராணுவத்தின் பிடிக்குள் மீளமுடியாதவாறு தள்ளிவிடும் செயற்பாட்டினையே த.தே.கூ செய்துள்ளது.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரித்திருக்கின்றமை தொடர்பில்
திரு சம்பந்தன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரித்திருக்கின்றமை தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. தமிழர்களுக்கெதிரான அரசின் இனஅழிப்பு யுத்தத்தினையும் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் சந்தித்த அவலத்தையும், மகிந்தராஐபக்ச தலைமையிலான சிங்கள அரசு 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 'றுயச யுபயiளெவ வுநசசழசளைஅ' என்று நியாயப்படுத்துகின்றமையை திரு சம்பந்தன் அவர்களது இக்கருத்து ஏற்றுக்கொள்வதாக உள்ளது.
வல்லாதிக்க சக்திகள் தத்தம் பூகோள, அரசியல், பொருளாதார நலன்களை அடைய பல நியாயபூர்வமான விடுதலைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி, அவர்கள் மீதான அழிப்பை நியாயப்படுத்துவதற்காகவே அவற்றை பயங்கவாத இயக்கங்களாக சித்தரிக்கின்றன. அந்த வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் பயங்கரவாத இயக்கமாக சிறீலங்கா அரசினாலும், சர்வதேச அரசுகளினாலும் முத்திரை குத்தப்பட்டனர்.
பூகோள ஆதிக்கத்தை நிலைநாட்டும் அரசியல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் பகுதியாகவே வல்லாதிக்க சக்திகளது துணையுடன் விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது. அவ்வாறிருக்க மனித உரிமைகளையும், ஐனநாயகத்தையும் பின்பற்றாமையினாலேயே அவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனக் கூறும் கருத்து நீண்ட அரசியல் அனுபவத்தினை கொண்ட திரு சம்பந்தன் அவர்களது அறியாமையினால் கூறப்பட்ட கருத்தல்ல. மாறாக அவர் சார்ந்து இயங்கும் தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் நோக்கில் கூறப்பட்ட கருத்தாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை வெளியாகி இலங்கை அரசாங்கம் போih நடாத்திய விதத்தினை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள இத்தருணத்தில் திரு சம்பந்தரின் இத்தகைய கருத்துக்கள் சிறீலங்கா அரசினை சர்வதேச விசாரணை நெருக்கடியில் இருந்து மீண்டும் தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், இன்று உருவாகிவரும் சர்வதேச சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சாதகமான வாய்ப்புக்களையும் இல்லாமல் அழிக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில வாரங்களாக சிறீலங்கா இராணுவத்தினராலும், பொலீசாராலும் பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் திரு சம்பந்தன் அவர்கள் பிறசக்திகளது தேவைகளுக்காக தமிழ் தேசத்தின் நலன்களுக்கு மாறாக கூறியுள்ள மேற்படி கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
கஐந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கNஐந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்
0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!