கடந்த 16.12.2012 அன்று டெல்லியில் ஓடும்
பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கியது. பின்னர் பேருந்தில் இருந்து மாணவியை அந்த
கும்பல் தூக்கி வீசியது.
இதில்
பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு
செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவிக்கு சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலி செலுத்தப்பட்டது. மெரீனா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ
மாணவியர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில்
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இதில்
கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை
கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Delhi gang-rape case
இறந்த மாணவிக்கு பொதுமக்கள் அஞ்சலி
0 Responses to பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டெல்லி மாணவி மரணம்! சென்னையில் அஞ்சலி!