கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் இடம்பெறவுள்ளது.
Place Gambetta, 75020 Parisஇல் ஆரம்பமாகும் பேரணி 341rue des Pyrénées, 75020 Paris இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தின் முன்பாக நிறைவடையும்.
அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.
கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
(01 43 58 11 22)
0 Responses to பாரிசில் கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி! (காணொளி இணைப்பு)