Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசத்தின் குரலான பாலா அண்ணனின் நீங்காத 6 வது ஆண்டு நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் என்னும் இடத்தில் நந்தியார் தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் 16.12.2012ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 3.00 மணிக்கு நினைவு கூரப்பட்டது.

பொதுச்சுடரினை நந்தியார் தமிழச்சங்க தலைவர் திரு. சாந்திக்குமார் அவர்கள் ஏற்றி வைக்க, ஈகைச்சுடரினை மாவீர் கப்ரன். சுதன் வீரவேங்கை சுதனா, நாட்டுப்பற்றாளர் திவாகர் ஆகிய மூன்று மாவீரர்களை தாய்மண்ணுக்காக உவந்தளித்த அன்னை அவர்கள் ஏற்றி வைக்க, மலர்மாலையை கப்ரன் ரூபனின் சகோதரி அவர்கள் தேசத்தின் குரல் பாலா அண்ணரின் திருவுருவப்படத்திற்கு அணிவித்தார். அகவணக்கம் செய்யப்பட்டு. மக்களின் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கலைஞர்கள் விடுதலைக்கானம் இசைக்கப்பட்டது.

நித்திய வாழ்வில் என்ற பாடலுக்கு செவரோன் தமிழச்சங்கத்தின் மாணவியர்களும், ராஐப்பறவை என்கின்ற பாடலுக்கு ஆதிபராசக்தி கலைக்கல்லூரி மாணவியும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற புரட்சிப்பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சங்க மாணவிகளும் நடனம் வழங்கியிருந்தனர். பாலா அண்ணர் நினைவுக் கவிதையினை திரு. பாஸ்கரன் அவர்களும், சுரத்தட்டு வாத்திய இசையினை நந்தியார் தமிழ்ச்சங்க மாணவமாணவியர்களும் வழங்கியிருந்தனர். சிறப்புரையினை திரு. அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார். அவர் தனதுரையில் பலா அண்ணனின் வாழ்வின் சரித்திரங்களையும், தனது இனத்தின் விடுதலையில் வைத்திருந்த பற்றுதலையும், இறுதிவரை ஓய்வு இன்றி உழைத்ததும், சிங்களத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கும் ஓர் அரசியல் சாணக்கியனாக சிம்மசெப்பனமாக விளங்கியவர் என்றும் அதனாலே தமிழீழத்தின் அதி உச்ச மதிப்பாக தமிழீழத்தின் குரல் என்கின்ற மதிப்பினை தேசியத்தலைவர் அவர்கள் அவருக்கு வழங்கியிருந்தார் என்று குறிப்பிட்டதோடு நாம் அவரின் நினைவு செய்வதும் பங்குபற்றுவதோடும் எமது பணிமுடிந்து விடக்கூடாது என்றும் அவர்கள் காட்டிய சனநாயக வழியிலே தொடர்ந்து எமது தேசம் கிடைக்கும் வரை அனைவரும் உழைக்க வேண்டும் என்றும். அதனையே இன்றைய உலகம் எமக்கு ஒரு வழியாக காட்டியிருக்கின்றது என்றும் அந்த வழியினை பின்பற்றி உழைத்து எதிரியின் கோழைத்தனமான துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவைத்தழுவிச்சென்ற கேணல் பரிதி அவர்களும் எம் கண்முன்னே மடிந்து எமது மக்களை எழுச்சியுறச் செய்திருக்கின்றார்.

தொடர்ந்து செல்வோம் விடுதலையை வெல்வோம் என கூறினார். தேசத்தின் குரல் பாலா அண்ணரின் 6ம் ஆண்டு நினைவு நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்கின்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றன.



0 Responses to பிரான்சில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 வது நீங்காத நினைவு வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com