Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைக்காக 45ஆண்டுகளுக்கும் மேலாக களம் அமைத்தும் போராடி 40ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தால் இன்று சர்வதேச நாடுகளையே தமிழர் தாயகம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்ப்படிதல், செயற்திறன், மிக்க செயற்பாடுகளையும் வியர்ந்து பார்த்து சர்வதேசத்தின் பல ஆய்வாளர்களும் அரசியல் வாதிகளும் இன்று பாராட்டிவருவது அனைவரும் அறிந்த விடையம்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, அவர்களின் ஆசிர்வாதத்துடன் தேர்தலில் நின்று, தமிழீழ மக்களின் அரசியல் ரீதியிலான ஏகப் பிரதிநிதிகள் என்ற உறுதியான உயர்ந்த இடத்தை தமக்கென அமைத்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய திரு.இரா.சம்மந்தன் ஆகிய நீங்கள் சிறீலங்கா பாராளுமன்றில் நிகழ்த்தியுள்ள உரையின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இழிவுபடுத்தும் வகையில், அவர்களை ஒரு பயங்கரவாத இயக்கமாகவும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், அதன் பண்பாடுகளையும் மதிக்கத் தவறியதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போனார்கள் என திரு.சம்மந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருப்பதை நாம் மறுப்பதோடு, எமது மிகவும் வன்மையான கண்டணத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான திரு.இரா.சம்மந்தன் ஆகிய நீங்கள் சிறீலங்கா பாராளுமன்றில் நிகழ்த்திய உரையில் தமிழீழ தேசத்தின் தேவை கருதியும்,தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள், தொடர்பாகவும் முக்கியமான பல விடையங்கள் அமைந்திருந்தாலும், எமது இனத்தின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சுயநலவாதம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகின்றது.
அதே வேளை நீங்கள் எந்த மனித நேயத்துடன், எந்த அடிப்படையின் ஆதாரங்களின் ஊடாக இந்தக் கருத்தை தெரிவித்துள்ளீர்கள் என்பதையும், நீங்கள் தெரிவித்துள்ள இந்தக் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களின்) கருத்தாக அமைந்துள்ளதா, அல்லது கூட்டமைப்பின் தலைவரும் சிறீலங்கா பாராளுமன்ற உறுப்பினராகிய திரு இர. சம்மந்தன் அவர்களின் தனிப்பட்ட கருத்தா என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் எமக்கும், எமது மக்களுக்கும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழீழ மக்களிக்கான அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிநாள் அனைத்துத் தமிழக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கலந்துரையாடலிலும், தேர்தலில் வெற்றி வகை சூடிய பின்னர் தமிழீழ தேசியத் தலைவரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட நீங்கள், தமிழினத்தின் மாபெரும் தலைவர் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகில் அமர்ந்து இருந்து திமிர்த்தனத்துடன் புன்னகைத்த பொழுதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உங்களுக்கு எவ்வாறு தெரிந்தது என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் உங்களுடைய பெயரும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளீர்கள், இந்தக் கருத்தையும் எந்த ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதையும், தெளிவுபடுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.
சிறிலங்கா படைகளினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வரையிலான இனவழிப்பு யுத்தத்தின் போது, யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் இருந்து காயமடைந்த மக்களையும், போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது, தமது மக்களுக்காக தாம் ஏந்திய ஆயுதங்களை மௌனித்து, ஆயுத ரீதியிலான தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டத்திற்கு அன்று முற்றுப்புள்ளி வைத்து, மூன்று அரை வருடங்கள் கழிந்த நிலையிலும், அன்று கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் கடைப்பிடிக்கும்,பண்பாடும், மனோ பக்குவவமும், தன்மானமும், தார்மீகமும் நிறைந்த தமிழ்மக்களின் பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும், இந்த உலகிற்று எடுத்துரைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.
தமிழீழம் என்ற இலக்கை அடையும் இறுதி இலக்கில், ஐக்கிய நாடுகள் சபையிலும். உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எமக்கான உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுக்கும் அளவிற்கு தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நகர்த்தி, தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உலகத் தமிழர்களை போராட வைத்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, மனித உரிமைகளைப் பேணத் தவறிய இயக்கமென உங்களால் எந்த நியாயத் தன்மையின் அடிப்படையில் உரைக்க முடிந்தது என்பதை ஆதாரங்களுடன் தெரிவிக்குமாறும் நாங்கள் உங்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உரிய பதில் வழங்கத் தவறும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் காலங்களில் நாங்கள், உங்களுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகைகளை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்பும் அதே வேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உங்களுக்கு வழங்கப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை இராயினாமா செய்வதன் ஊடாக, தமிழ்த் தேசியத்தை உண்மையில் நேசிக்கும் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறும் உரிமையுடன் நாம் வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

செம்மலை-957

தமிழீழம்.

தொடர்புகொள்ள: semmalai957@gmail.com
நாங்கள் உங்களைச் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் அண்ணனின் வழிகாட்டலில் வந்தவர்கள் என்பதனால் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒருவனின் ஊடாக வருகிறோம்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்துள்ள கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - செம்மலை-957

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com