துயரம், தேசிய அவமானம், எனச் செய்திகளில் சுட்டப்படும், டெல்லி பாலியல்
வன்முறையில் பாதிப்புற்ற மாணவி, 13 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில்
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று
அதிகாலை 4:30 மணி அளவில் மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்தது.
மாணவியின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிப்பதாகவும், எனினும் மருத்துவர்கள், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள் உணர்ந்து, மதிப்பளிப்பதாகவும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தைரியமான பெண் என தற்போது அவரை கௌரவப்படுத்துகிறார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. ஒரு வார அமைதிக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பிரதமர் மன்மோகன் சிங் இவ்விவகாரத்தை பற்றி பேச ஆரம்பித்திருந்தார். டெல்லியின் பெண் முதல்வர் ஷீலா தீக்க்ஷித் உடனடியாக இந்தியாவில் 65 காவல்துறை நிலையங்கள் முழுவதுமாக பெண்களை கொண்டு மாத்திரம் இயங்குவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்படும் என்கிறார்.
சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். மும்பை பாலிவுட் நடசத்திரங்கள், கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள் என்று திரையுலகமே திரண்டு கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மாணவிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லியின் பெரும்பாலான மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெழுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு நிகழ்வு.
பிரதான நெடுஞ்சாலைகளை வழிமறித்து போராட்டம். பதாகைகள், சுலோகங்கள் ஏந்திய போராட்டம், என பெண்கள், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகின்றன. மத்திய டெல்லியில் ஐந்து பேர் ஒன்றாக கூடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் மாத்திரமே ஆர்ப்பாட்ட காரர்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
'நிர்பாய்', 'தாமினி', 'அமர்நாத்' ஊடகங்கள் அப்பெண்ணுக்கு வைக்கும் பெயர்கள். ஏன் இவை? வரலாற்றில் ஞாபகம் வைத்திருக்க ஒரு பெயர் தேவை என்பதற்கா? அல்லது எங்கோ ஒரு தெரு மூலையில் நின்று கொண்டு, அப்பெண்ணுக்கு இருட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தவா? ஒரு சோகத்தின் அடையாளமாகவோ ஒரு எதிர்பார்ப்பு அல்லது ஒரு வெட்கப்படவேண்டிய விடயத்தின் அடையாளமாகவோ தான் உருவாக வேண்டும் என அப்பெண் எப்போதாவது விரும்பியிருந்தாளா?
இவையெல்லாம் நாம் அவளுக்கு கொடுக்கும் அடையாளங்கள் தான். சாதாரணமாய் தன் வீட்டுக்கு செல்லவே அப்பெண் பஸ்ஸில் ஏறினாள். தான் பார்த்த திரைப்படத்தின் அனுபவத்தை வீட்டுக்கு சென்றதும் தனது நண்பனுக்கு சொல்ல நினைத்திருக்க கூடும். இதே டெல்லியில் அச்சம்பவத்திற்கு சற்று முன் பின்னாக, ஒரு பெண் காரில் இளைஞர் குழுவொன்றினால், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஊடகவியலாளர் ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பட்டியாலாயாவில், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், தனது வாக்குமூலத்தை போலிஸார் ஏற்காது அலைக்கழித்த வெறுப்பில் தூக்கு மாட்டி இறந்தார். தனது இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என விரும்பிய பெண் ஒருவரை இப்போது பறிகொடுத்துவிட்டோம் என்கிறது Firstpost தனது கட்டுரையொன்றில்.
இச் சம்பவம் தொடர்பில் எழுத்தாளர் ஞாநி "ஆரம்பத்திலிருந்தே வந்த செய்திகளிலிருந்து அவள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஒரு சதவிகிதம்தான் என்பது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், அவளுடைய மன உறுதிக்காக அவள் பிழைத்து வரவேண்டுமென்று மனம் ஏங்கியது. மிகக் கொடுமையான துயரங்களுக்கு மத்தியில் இருந்தபோதும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையை நமக்குத் தொற்றவைக்கக்கூடிய சிலரை அபூர்வமாகவே பார்க்கிறோம். இடிந்தகரை மக்களைப் போல.
இந்தப் பெண்ணைப் போல. "என எழுதிய 'பேஸ்புக்' வலைத்தளக் குறிப்பின் தொடரும் உரையாடலில்;
'இந்த வருடத்தின் மாபெரும் துயரமான நாள் என்று சொல்ல வைத்த ஊடகங்களை வியக்கிறேன்......வேறு இடங்களில் நடந்த போது இல்லாத துயரத்தை இப்போது கிளப்பி விடப்பட்டுள்ளது ' என sathish chelladurai ஒரு கருத்தினை எழுதியுள்ளார்.
இதற்கான பதிலாக ஞாநி எழுதுகையில், 'ஒவ்வொரு பாலியல் வன்முறை நிகழ்வும் நம் மனதில் துயரத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் சில சூழ்நிலைகளினால், கவனம் பெறும்போது துயரத்தைக் கூட்டாகப் பகிர்ந்துகொள்லும் வாய்ப்பாகிறது. அதனால் கூட்டாக பகிராத நேரத்தில் எல்லாம் நாம் இதைப் பற்றித் துயரப்படவில்லை என்று அர்த்தமில்லை. ஊடகம் கிளப்பிவிட்டுள்ளது என்று சொல்லி துயரத்தைக் கொச்சைப்படுத்த இயலாது. ஊடகம் எத்தனையோ விஷயங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டேதான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாம் கிளம்பிவிடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வட்டாரத்தையும் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் அந்த வட்டாரத்துக்கே முன்னுரிமையும் அக்கறையும் இதர பகுதிகள் பற்றி அலட்சியமும் காட்டுவது புதிதல்ல. அதன் தொடர்ச்சிதான் டெல்லி நிகழ்ச்சி பற்றீய டெல்லி மையம் கொண்டிருக்கும் ஆங்கில சேனல்களின் அணுகுமுறையும். நாமும் அப்படித்தான்.
இலங்கைத்தமிழர் பிரச்சினையில் நாம் காட்டிய ஈடுபாட்டில் நூற்றில் ஒரு பங்கு கூட நாம் காஷ்மீர், வட கிழக்கு, ஜார்கண்ட், குஜராத் கொலைகள் ஆகியவற்றில் காட்டியதில்லை. ஊடகங்கள் அவரவரின் பிரதான வாசகர்/நேயர் சார்ந்தே இயங்குபவை. வட்டாரம் கடந்து செய்தி வெளியிடுவது என்பது எப்போதுமே பரபரப்பான அல்லது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவங்களை ஒட்டி மட்டும்தான்.
அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தினசரி இதழ்களில் இந்தியா பற்றி ஒரு சின்ன செய்தி கூட வருவதில்லை. அபூர்வமாகவே வரும். முழுக்க உள்ளூர் செய்திகளே நிரம்பியிருக்கும். அவற்றோடு ஒப்பிடும்போது இந்திய செய்தித்தாட்களும் ஊடகங்களும் பரவாயில்லை. பிற மாநிலச் செய்திகளை, பிற நாட்டுச் செய்திகளை ஓரளவேனும் வெளியிடுகின்றன.
மற்றபடி நீங்கள் இந்த தருணத்தைப்பயன்படுத்தி கவனம் திருப்ப விரும்பும் தேசிய துரோகங்கள் விவாதம் இப்போது உகந்ததல்ல. எனினும் செய்யப்படவேண்டியதே. சம அதிகாரம் உடைய தேசிய இனங்களின் கூட்டாட்சியாக இந்திய அரசு மாறும் நாளில் மட்டுமே இப்படிப்பட்ட மாற்றங்களை அவாவமுடியும் ' எனக் குறிப்பிடுகின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மனித உரிமை, தொழிலாளர் நலன் உரிமை ஆர்வலரும் செயற்பாட்டாளருமான யோ. திரு தனது பேஸ்புக் சமூக வலைத்தளக் குறிப்பில், அரசு - ஊடகங்கள்- எதிர்கட்சிகள் நடத்துகிற முத்தரப்பு நாடகத்தின் நூல்களில் சிக்கிய பொம்மலாட்ட பொம்மைகளாக நடுத்தர வர்க்கமும், மாணவர்களும் ஆக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
அவரது அக் குறிப்பில்; திடீரென்று சோனியா ஊடகங்கள் வழியாக பேசுகிறார். சீலா தீட்சித் மாணவர்களோடு போராட்ட களத்தில் கலந்துகொள்கிறார். மக்களோடு சேர்ந்து அரசும் திடீரென்று கண்விழித்து பாலியல் குற்றங்கள் மீது பொங்கி எழுவது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அரசு நடத்திய கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி உட்பட அடக்குமுறையெல்லாம்
மறக்கடிக்கப்படுகின்றன. மாணவியின் உயிர் சிக்கலான நிலமையை நெருங்கியதும் அவசரமாக சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப அமைச்சரவை முடிவெடுத்து அனுப்பியது. இறப்பிற்கு பின்னர் உடல் தனி விமானத்தில் வருகிறது. பாலியல் சித்திரவதை, பலாத்கார கொலையில் பலியான மாணவியை "India's daughter" - ndtv, "Black Saturday" - times now, "Delhi's Breave Heart" - ibnlive என்று ஊடகங்கள் அழைக்கின்றன.
ஊடகங்களும், அரசும் செய்கிற இந்த தந்திரங்கள் பாதிக்கப்பட்ட மாணவியை பெருமைப்படுத்துவதாக கருத முடியாது. இந்தியா கேட் போராட்டம் எவ்வகையிலும் எகிப்தின் தாகிர் மைதானம் போல மாறாமல் இருக்க ஊடகங்களும், டில்லியும் மிக பதட்டமாக செயல்படுவது தெரிகிறது. இந்திய நடுத்தர வர்க்கம் அப்படியொன்றும் அடிப்படை மாற்றத்தையோ, அரசியல் மாற்றத்தையோ நினைத்து போராடுவதற்கான அறிகுறிகளில்லை. அதிகபட்சமாக நீதிமன்றக் கொலையை தண்டனையாக கோருவது அல்லது ஆட்சி மாற்றம் வந்துவிட்டால் சகல நோய்களுக்கும் தீர்வு கிடைத்துவிடுமென்று நம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர்.
டில்லியில் காங்கிரஸ் கட்சியினர் சீக்கிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கு என்ன தண்டனையை சோனியா, சீலா தீட்சித் பரிந்துரைக்கிறார்கள்? போபாலில் பா.ஜ.க அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பெண். அந்த குற்றவாளிகளுக்கும், 2002ம் குஜராத் படுகொலையின் போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கும் என்ன தண்டனையை சுஷ்மா சுவராஜ் பரிந்துரைக்கிறார் என்பது எந்த ஊடகத்திலும் இல்லை. காஷ்மீர், ஈழம், அசாமில் இந்திய ராணுவத்தின் பாலியல் வக்கிரத்திற்கும், பலாத்காரத்திற்கும் ஆளான பெண்களுக்கு உரிமைகளும், சுயமரியாதையும் கண்ணியமும் இல்லையா? அவர்களெல்லாம் மனிதர்களில்லையா? அரசு - ஊடகங்கள்- எதிர்கட்சியான பா.ஜ.க நடத்துகிற முத்தரப்பு நாடகத்தின் நூல்களில் சிக்கிய பொம்மலாட்ட பொம்மைகளாக நடுத்தர வர்க்கமும், மாணவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.
கொலைகள், பெண்களை கடத்தி விற்பனை செய்தல் உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றம் ஆட்டோ சங்கருக்கும், 2 கூட்டாளிகளுக்கும் கொலையை தண்டனையாக 1995ல் நிறைவேற்றியது. அதற்கு பிறகு பெண்களுக்கும், சிறார்களுக்கும் எதிரான கொலைகளும், பாலியல் குற்றங்களும், கடத்தல்களும் எத்தனை நடைபெற்றுள்ளன. ஏன் குற்றம் செய்தவர்களுக்கு "மரணதண்டனை" குறித்த அச்சம் உருவாகவில்லை? குற்றம் செய்பவர்கள் தண்டனையை குறித்து யோசித்து குற்றங்களில் ஈடுபடுவதில்லை.
நமது குற்றவியல் விசாரணை மற்றும் நீதி பரிபாலனை அமைப்புகளின் அணுகுமுறையும், அவற்றில் மலிந்துள்ள லஞ்சமும் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழல்களை உருவாக்கியுள்ளன. எந்த வழக்கையும் பதிவு செய்ய காவல்த்துறை அலுவலகத்திற்கு அச்சமில்லாமலும்,
கண்ணியத்தோடும், அலைச்சல்கள், சிபாரிசுகள் இல்லாமல் ஒரு எளிய மனிதனால் சென்று திரும்பும் நிலை எந்தவொரு காவல்நிலையத்திலும் இல்லை. வழக்குகள் பதிவு செய்தல், தரவுகளை சேர்த்தல், நீதிமன்ற விசாரணை உட்பட குற்றவியல் விசாரணை நடைமுறை துரிதமாக, வெளிப்படையாக, நேர்மையாக, எளிதாக செயல்படும் வகையில் இல்லை. குற்றவியல், நீதிமன்ற அமைப்புகளில் இந்த அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் வரையில்
குற்றமிழைப்பவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் சாதகமான சூழல்களே நீடிக்கிறது. அடிப்படை மாற்றத்திற்காக போராடாத வரையில் இத்தகைய எழுச்சிகள் ஊடகங்களுக்கும், அரசுக்கும், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கும் அரசியல் நாடகங்களுக்கான களமாகவே அமையும். என்ற அக்கறை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக பல்வேறு தளங்களிலும், பல்வேறு கருத்துநிலைகளைத் தோற்றுவித்திருக்கும் இச் சம்பவத்தில் பாதிப்புற்ற அப் பெண், 'The Life of Pi' திரைப்படத்தை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ்ஸில் ஏறிய போதே இந்நிலைமை ஏற்பட்டது. திரைப்படத்தின் இறுதியில் அப் படத்தில் சொல்லப்படும் கதைக்கு இரு வகை மாதிரி முடிவுகளும், மிகச்சிறந்ததை தெரிவு செய்யவேண்டியது உங்களுக்கானதும் என்பதுமாக படம் முடிந்து போகும்.
இப்பெண்ணின் மரணமும், அது தோற்றுவித்திருக்கம் தாக்கமும் அத்தகையதோ என எண்ணத் தோன்றுகிறது. 'நாங்கள் மாதா துர்கா, மாதா லக்க்ஷ்மியை வணங்குவோம். எமது தாய், சகோதரி, மகளை நேசிப்போம்.ஷீலா தீக்க்ஷித், சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு வாக்களிப்போம். ஆனால் பெண்களை இழிவுபடுத்துவோம். பெண்களை பாலியல் பலாத்காரப் படுத்துவோம்.பெண்களை அடிப்போம். என்ன இது பாசாங்குத்தனம்? என்ற கோஷங்களோடு எழுந்துள்ள போராட்டங்கள், கல்வீச்சு, தண்னீர் கலன் வீச்சு என்பவற்றில் வன்முறையென்ற அடையாளப்படுத்தல்களுடன் முடிந்து போகலாம். அல்லது, குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், விசாரணையின் பின் கொல்லப்படுவதுடன் முடிந்து போகலாம்.
அல்லது மக்கள் இதை மறப்பதற்கும், மாறிப் பற்றிக் கொள்வதற்குமான போட்டியோ, பொழுது போக்கோ அல்து வேறேதாகிலும் விடயமோ கிடைக்கும் வரை தொடரலாம்...
இவ்வாறான ..லாம்களைத் தவிர, மற்றும்படி இந்தியா கேட் போராட்டம் எவ்வகையிலும் எகிப்தின் தாகிர் மைதானம் போல மாற்றமடையும் என்னும் சூழ்நிலையும், கருத்து நிலையும், இப்போதைக்கு இந்தியாவில் இல்லையென்பதே உண்மை. இவை அத்தனையும் மீறிய அதிசயமேதும் நடந்துவிடுமா..?
இவை இந்திய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களால் டெல்லி ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் :

0 Responses to எகிப்தின் தஹ்ரிர் போலாகுமா இந்தியா கேட் போராட்டங்கள்..?