இலங்கையில் மனித உரிமைகள் மேம்படாது போனால் 2013ம் ஆண்டு இலங்கையில்
நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தாம் பங்கேற்க போவதில்லை என
கனடா மீண்டும் அறிவித்துள்ளது.
கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கிரிஸ்டியன் ரோய் இது தொடர்பில் தெரிவிக்கையில், இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க தவறி வருவதாகவே கருதப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் விடயங்களில் இலங்கை அரசு இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே கனடா கருதுகிறது. அத்துடன் இலங்கையின் நீதித்துறைக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளும் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலும் கனடா அவதானித்து வருகிறது என கூறியுள்ளார்.
அண்மையில் கனேடிய பாராளுமன்றத்தின் விவாத நேரத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் இலங்கை தமிழருமான ராதிகா சிற்சபேசன், இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிக்குமா என தெளிவுபடுத்தவேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே கனேடிய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

0 Responses to உரிமைகள் மேம்படாத வரை இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை : கனடா