Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் உள்ள நியூட்டன் என்னும் மாநகரில் உள்ள சாண்டி ஹுக் என்னும் ஆரம்ப பாடசாலை ஒன்றினுள் புகுந்த 20 வயது இளைஞன் ஒருவன், இயந்திரத் துப்பாக்கியால் மாணவர்கள் மீது சுட்டுள்ளான். வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இப் பாடசாலைக்குள் வலுக்கட்டாயமாக நுளைந்த அடாம் லன்ஸா என்னும் இளைஞனே இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுள்ளான். இப் பாடசாலையில் 5 வயது தொடக்கம் 10 வயதான பல சிறுவர்கள் கல்வி பயன்று வந்தனர். அவர்கள் அனைவரும் செய்வதறியாது தெறித்து ஓடியுள்ளார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று அவர்கள் உணருமுன்னரே சுமார் 20 சிறுவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ள மாணவர்களையாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் தம்மால் எவ்வளவு மாணவர்களை கட்டிப் பிடிக்க முடியுமோ அவ்வளவு மாணவர்களை கட்டிப் பிடித்துள்ளார்கள் 3 ஆசிரியர்கள். இதன் காரணமாக அவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு பட்டு அந்த 3 ஆசிரியர்களும் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். தாம் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளைகள் காப்பாற்றப்படவேண்டும் என்று நினைத்த இந்த ஆசிரியர்களுக்கு நாம் இணையம் தலைவணங்குகிறது !


துப்பாக்கியைக் கண்டால் பயந்து ஓட்டம் எடுக்கும் நபர்களுக்கு மத்தியில், இவர்களில் 3 வர் இவ்வாறு இறந்துள்ளார்கள். குறிப்பாக விக்டோரியா சோட்டோ, என்னும் ஆரிசியர் தனது இறப்பின் மூலம் பல பிள்ளைகளைக் காப்பாற்றியுள்ளார். மேலும் 4 பள்ளி உத்தியோகத்தர்கள் இத் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார்கள். மொத்தமாக 27 பேர் இறந்துள்ளார்கள் என்றும் பலர் காயப்பட்டுள்ளார்கள் என்றும் அறியப்படுகிறது. இதில் கொலையாளியான அடாமை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா அவர்கள், பேசவார்த்தைகள் வராமல் அழுதுவிட்டார். தாம் அமெரிக்க அதிபராக இருப்பதை விட நல்ல ஒரு தகப்பனாக இருக்கவே விரும்புகிறேன் என்று அவர் கூறிய வார்த்தைகள், அமெரிக்கர் பலரை கண் கலங்க வைத்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில், இவ்வாறு பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் முன்னர் நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவத்தால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பல பாடசாலை மாணவர்கள் தமது நண்பர்களையும் சகோதரர்களையும் இழந்து தவிக்கிறார்கள். பல மாணவர்கள், மற்றும் மாணவிகள் இரவில் தூக்கம் இன்றி , கொடுமையான கணவுகளைக் கண்டு, மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்றவேளை எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே தருகிறோம் ! அமெரிக்காவில் ஒரு நாளில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் உலகம் எல்லாம் பரவி, அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. ஆனால் 2009ம் ஆண்டு மே மேதம், தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலுக்கு மத்தியில் எமது தமிழ் சிறுவர்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டனரே ? அன்று உலகம் ஏன் எங்களைக் கவனிக்கவே இல்லை ? தமிழர்களாகிய நாம் இன்று அமெரிக்காவுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் ! நடந்த கொடுமைக்காவது இனியாவது இலங்கை அரசை தண்டிக்க அமெரிக்கா, தனது இரட்டை வேடத்தைக் களைந்து வெளியே வருமா ? தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொண்டுவந்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுமா ?


அமெரிக்க கப்பல் வரும், காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல அது நிச்சயம் வரும் என்ற விடையம் ஈழத் தமிழ் தலைவர்களிடையே பேசப்பட்ட விடையம் அல்ல. அது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் பேசப்பட்ட விடையம் என்பதனை ஒரு சிலர் நன்கு அறிவார்கள். இதற்கான தொலைநகல் கூட சிலரிடம் ஆதாரமாக இருக்கிறது. இவ்வாறு ஒரு நம்பிக்கையை ஊட்டி, இறுதியில் காலைவாரிய அமெரிக்கா இனியாவது ஈழத் தமிழர் விடையத்தில் காத்திரமான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும் ! சர்வதேசம் எமது எதிரியல்ல என்று எமது தேசிய தலைவர் பல முறை மாவீரர் தின உரைகளில் குறிப்பிட்டுள்ளார். இது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பதனை அவர் பல தடவைகள் தெளிவுபடுத்தியிருக்கிறார். நடைபெற்றுள்ள துயரச் சம்பவம், முள்ளிவாய்க்கால் வலிகளை உணரவைக்குமா ?

அதிர்வு.
வல்லிபுரத்தான்.


2 Responses to கண்கள் கலங்கிய ஒபாமா! முள்ளிவாய்கால் தெரியவில்லை?

  1. Unknown Says:
  2. This comment has been removed by the author.  
  3. Unknown Says:
  4. NO OIL, no cry, that all, i don't why tamil is USA have group for obama, he not care about tamil in srilanka, if this was indian people , he will do something mpore

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com