Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று காலை சிங்கப்பூரில் மரணமடைந்த டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அஞ்சலி செலுத்த வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ஆர்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் பூதவுடல் சிங்கப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பல மாணவ அமைப்புக்கள் ஒன்று கூடி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காலைமுதல் மவுன அஞ்சலை செலுத்தி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் பாதிக்கப் பட்டு உயிரிழந்த மாணவிக்கு  அஞ்சலி செலுத்த ஜந்தர்மந்திர் பகுதிக்கு சென்றார். அங்கு ஷீலா தீட்சித்த்தைக் கண்டதுமே, அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தள்ளு முள்ளு ஏற்படும் நிலை உண்டாகவே, ஷீலா தீட்சித் வெறும் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டு உடனடியாக கிளம்பியுள்ளார்.

இன்று காலை தொடக்கம் மாலைவரை ஜந்தர் மந்தர் பகுதியில் உயிரிழந்த மாணவிக்கு மாணவ அமைப்புக்கள் மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலை செலுத்தியது  குறிபிடத் தக்கது.

0 Responses to உயிர் நீத்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அஞ்சலி செலுத்த வந்த டெல்லி முதல்வருக்கு கடும் எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com