Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சியினர் நடத்திய அறப் போராட்டம் அமோக எழுச்சியுடன் வெற்றி பெற்றிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த அந்த நாளில் இருந்து நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைப் பட்டியலிட்டு பேசினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிக நன்றாக உள்ளதாகக் அம்மையார் கூறுகிறார் என்று கூறினார். இருண்ட தமிழகத்தை உருவாக்கி கள்ளர்களுக்கு நன்மை செய்துவிட்டார் ஜெயலலிதா என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.

அறப்போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு எதிரான இந்த போராட்டம் எழுச்சி மிகு வெற்றி என்றும் கூறியுள்ளார். தமது ஆட்சி காலத்தில் கடுகளவு இருந்த மின்வெட்டு இப்போது கடலளவு இருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் இருண்ட ஆட்சியை அகற்றவேண்டும் என்கிற எண்ணமே மக்களின் இந்த எழுச்சிக்கு காரணம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரை, திருவாரூர், சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களின், நகரங்கள், சிற்றூர்கள் என்று அனைத்து ஊர்களிலும் இந்த அறப்போராட்டம் நடந்ததாக திமுகவின் செய்திக் குறிப்பில் தெறிவிக்க பட்டுள்ளது.

0 Responses to திமுக நடத்திய அறப்போராட்டம் அமோக எழுச்சியுடன் வெற்றி: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com