Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் கடந்த 24 மணிநேரங்களில் பெய்த கடும் மழையினால், மலையக, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி, மாத்தளை பகுதியில் வெள்ளம், மண்சரிவினால் 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனிடையே நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலைய குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுலை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார், 21 ஆயிரம் பேர் மழையினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இலங்கையின் பல பாகங்களில் கடும் மழை, வெள்ளம்: 9 பேர் பலி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com