டெல்லியில் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளான பாராமெடிக்கல் மாணவி உயிரிழந்தார். சிங்கப்பூர் மவுண்ட்
எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவியின் உயிர் பிரிந்தது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டில்லியின் பிரதான சாலை ஜனாதிபதி மாளிகை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதனால் டில்லியில் மீண்டும் பரபரப்பு காணப்பட்டது.
மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்; நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அனைவரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்துங்கள்; அதேசமயம் வன்முறை வேண்டாம்; இளைஞர்கள் அமைதியான முறையில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 Responses to மருத்துவ மாணவி உயிரிப்பு! டில்லியில் முக்கிய சாலைகள் மூடல்! பலத்த பாதுகாப்பு!