Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனியில் பிராங்போர்ட் நகரில் 28.12.2012 அன்று சுனாமி பேரழிவு 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆழிப்பேரலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக மற்றும் போரில் கொல்லப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்காகவும் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இவ் பிரார்த்தனையில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு  சிறப்பித்தனர். பிரார்த்தனையில் யேர்மனியில்  வாழும்  சிறுவர்களினால் கவிதைகள் மற்றும் உரைகள் வாசிக்கப்பட்டு நினைவில் கொள்ளப்பட்டது.

தேவாலயத்தில்  தமிழ் இளையோர் அமைப்பினரால் சிறீலங்காவில்  60 ஆண்டுகளாக நடைபெற்று வரும்  இனவழிப்பு, தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகள் மற்றும்  இன்றைய நிலமைகள் பற்றி வருகை தந்த மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் உயிரிழந்த மக்களுக்கும், சிறுவர்களுக்கும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.












தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி – ஊடகப்பிரிவு

0 Responses to ஆழிப்பேரலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவு மற்றும் அப்பாவி சிறுவர்களுக்கான தினம் யேர்மனியில் நினைவில் கூரப்பட்டது.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com