யேர்மனியில் ஆலன் நகரில் 26 .12 .2012 அன்று காலையில் சுனாமி பேரழிவு 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆழிப்பேரலையில் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக அவ் நகர மதகுரு Bernhard Richter தலைமையில் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .
அங்கு உரை ஆற்றிய மதகுரு Bernhard Richter அவர்கள் சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் அரசியல் ஆழிப்பேரழிவை சுட்டிக் காட்டி அங்கு தமிழ் மக்களுக்கு நடைபெறும் அடக்குமுறையை மனிதவுரிமை மீறலை இனவழிப்பை கண்டித்தார் .அதே நேரத்தில் தமது நகரத்தில் வாழும் தமிழ் மக்களை அவர்களது சமூக பண்புகளை மதித்து பாராட்டினார் .அத்தோடு தமிழ் மக்கள் தனது நகரத்துக்கு பெருமையை சேர்க்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டார் .
ஆலன் தமிழாலயத்தின் அதிபர் திரு தனபாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை எடுத்துரைத்ததை தொடர்ந்து சுனாமி பேரழிவு காலத்தில் யேர்மனிய மக்கள் ஆற்றிய உதவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார் .அதேநேரத்தில் அன்றைய நேரத்தில் புனரமைக்கப்பட்ட அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போரால் முற்றாக அழிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார் .இறுதியாக 2009 ஆண்டு போர் முடிவடைந்தாலும் இன்று வரை இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புகளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை இன்று வரை பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களுக்கு போகவிடாமல் , மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் இன்றும் சிங்கள அரசால் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் இனவழிப்பையும் எடுத்துரைத்தார் .
பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .
அங்கு "இரு சுனாமிகளால்" கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவு தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தினர் .
நினைவஞ்சலியின் தகவல் உள்ளூர் ஊடகமான" Schwäbische Post " எனும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது .
http://www.schwaebische.de/region/ostalb/aalen/stadtnachrichten-aalen_artikel,-Tamilen-gedenken-Tsunamiopfer-_arid,5369273.html
மாபெரும் இயற்க்கை அழிவால் கொல்லப்பட்ட மக்களை மறவாமல் , சிறப்பாக யேர்மனிய மக்களையும் இணைத்து இவ் நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக முன்னெடுத்த ஆலன் நகர தமிழ் மக்களுக்கு , யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தனது வாழ்த்துக்களை இத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது .
ஆலன் தமிழ் மக்கள் பல்லாண்டு காலமாக யேர்மனிய மக்களுடன் சமூக இணைவாக்கம் கருதி பல வேலைத்திட்டங்களை முன்மாதிரியாக முன்னெடுப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
யேர்மன் பெர்லின் நகரிலும் 27 .12 .2012 அன்று நடைபெற்ற தேவாலய ஒளி விழாவில் ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சிக்குண்ட தமிழ் மக்களுக்காகவும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .
இன்றும் இயற்கை அனர்த்தத்தால் எவ்வித உதவியும் இல்லாமல் எமது உதவிக் கரங்களை நாடி நிற்கும் நம் உறவுகளுக்கு உதவிடுவோம் .
Stichwort : Flutopfer 2012
தொடர்புகட்கு பாதர் Albert Koolen
Albertkoolen@gmx.de
www.help-for-smile.org
ஈழத்தமிழர் மக்கள் அவை -யேர்மனி
Volksrat der Eelam Tamilen Deutschland e.V.
http://www.vetd.org/

Help for smile e.V.
Konto - Nr. 1034926014
BLZ: 32060362 ( Volksbank Krefeld )Stichwort : Flutopfer 2012
தொடர்புகட்கு பாதர் Albert Koolen
Albertkoolen@gmx.de
www.help-for-smile.org
ஈழத்தமிழர் மக்கள் அவை -யேர்மனி
Volksrat der Eelam Tamilen Deutschland e.V.
http://www.vetd.org/
0 Responses to யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையில் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவு நிகழ்வு