நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர உதவி எண் 181 என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களிலும் இந்த அவசர எண்ணை பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு என்று அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பின்னர், பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதல் ஒரு பகுதியாக பெண்கள் பாதுகாப்புக்கு இந்த அவசர அழைப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
முதலில் இந்த அவசர உதவி எண் 167 என்று அறிவிக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எண் எளிதில் நினைவில் வைத்து கொள்ள முடியாது என்கிற காரணத்தினால் 181 என்கிற எண் பரிந்துரை செய்யப்பட்டு, பின்னர் அதுவே தேர்வும் செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண் 181 அறிவிக்கப் பட்டுள்ளது. இதுத் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், கடிதம் எழுதவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த எண் ஒதுக்கப் பட்ட பிறகு மாநில அரசுகள் இதற்கான மையத்தை ஆரம்பிக்க அறிவுறுத்தப் படும்" என்று கூறியுள்ளார்.

0 Responses to நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர உதவி எண் 181: மத்திய அரசு