தென் மாவட்டங்களிலிருந்து குறிப்பாக நெல்லை
மாவட்டத்தின் கடையநல்லூர் பகுதியிலிருந்து ஏராளமானவர்கள் அரபு நாடுகளில்
வேலை நிமித்தம் பணிபுரிகின்றனர்.
இவர்களில் சவுதி அரேபியாவில் பணி புரிந்து வரும் இஸ்லாமியர்கள், தமிழர்கள் உட்பட 43 பேர்கள் கடந்த பல மாதங்களாக சம்பளமின்றி தவித்து வருகின்றார்கள். பல விதமான இன்னல்களுக்கு ஆளானவர்களின் நிலை பற்றி குறிப்பிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி மாநில அமைப்புக் குழு உறுப்பினர் செய்யது இப்ராகிம் வைக்கும் கோரிக்கை.
சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள அல்முத்துல்புட் ஸ்டப் என்கிற தனியார் பேக்கரியில் பணி புரியும் 43 இந்தியர்களில் இஸ்லாமியர், தமிழர், மலையாளி என பல தரப்பட்டவர்கள். கடந்த பல மாதங்களாக அந்நிறுவனம் அவர்களுக்கான ஊதியத்தை வழங்கவில்லை. மேலும் கடந்த ஒருவருடத் துக்கும் மேலாக அவர்கள் குடியிருப்பதற்கான அனுமதியை அந்நிறுவனம் புதுப்பிக்கவும் மறுத்துவருகிறது.
இதன் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 43 தொழிலாளர்கள், உடல் மற்றும் மனரீதியாகப் பாதித்துள்ளனர் இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டும் பயனில்லை.
லேபர் கோர்ட் எனப்படும் அங்குள்ள தொழிலாளர்களின் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும் நடவடிக்கை இல்லை என வே இது தொடர்பாக மத்திய அமைச்சர் அகமதுவுக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது எனவே தாயகம் திரும்ப விரும்பும் இவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார் செய்யது இப்ராகிம்.
-பரமசிவன்

0 Responses to சவுதியில் தவிக்கும் 43 இந்தியர்கள் : நாடு திரும்ப உதவ கோரிக்கை